பாடசாலை சீருடை துணிக்கான வவுச்சர் அடுத்த மாதம்

பாடசாலை சீருடை துணிக்கான வவுச்சர் இந்த ஆண்டில் நேர காலத்துடன் வழங்கப்படும் என்று கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரண தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அடுத்த மாதம் முதல் வவுச்சர்களை மாணவர்களுக்கு வழங்குவது கல்வி அமைச்சின் இலக்காகும்.

 

அரசாங்க பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கும், பிரிவெனாக்களில் கற்கும் பிக்குகளுக்கும் இந்த வெளச்சர் வழங்கப்படவிருக்கிறது.

 

இதற்கென அரசாங்கம் இந்த ஆண்டில் 250 கோடி ரூபாவை செலவிடுகிறது.