களுவாஞ்சிகுடியில் ஆடிப்பூரப் பெருவிழா

மேல்மருத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் வாரவழிபாட்டுமன்றம் களுவாஞ்சிகுடி கிளையினால் அன்னை ஆதிபராசக்தியின் ஆடிப்பூரப் பெருவிழா களுவாஞ்சிகுடி சக்தி இல்ல வளாகத்தில் அமைந்துள்ள மேல்மருத்தூர் அன்னை ஆதிபராசக்தி ஆலயத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கஞ்சிப்பாத்திர பவனி, ஆன்மீக சொற்பொழிவுகள், வறியமக்களின் மேம்பாட்டுக்கான சமூகசேவை உதவிகளும் நடைபெற்றன. ஆதிபராசக்தியின் பக்தர்கள் களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கஞ்சிப்பாத்திரம் ஏந்தி பவனியாக சக்திஇல்ல வளாகத்தைச் சென்றடைந்தனர்.
அங்கு ஆதிபராசக்தி அன்னைக்கு பூசை வழிபாடும் பாத பூசையும் இடம்பெற்றதுடன் கஞ்சி வார்த்தல் நிகழ்வும் இடம்பெபற்றமை குறிப்பிடத்தக்கது.