மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு பீட பிரதான மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் இரத்ததான முகாம்

மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு எம்.ஜே.எப்  (306சீ2)  லயன்ஸ் கழக அனுசரணையுடன் கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் ஏற்பாட்டில், மாபெரும் இரத்ததான முகாம் மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு பீட பிரதான மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (12ஆம் திகதி) நடைபெற்றது.

இம் முகாமில், புதிய நூற்றாண்டு எம்.ஜே.எப்  (306சீ2 )  லயன்ஸ் கழக உறுப்பினர்கள், சௌக்கிய பராமரிப்பு பீட வைத்தியர்கள், மாணவர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தினர் என சுமார் 140 பேர் பங்குகொண்டு இரத்ததானத்தினை வழங்கிவைத்தனர்.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு புதிய நூற்றாண்டு லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன். என்.புஸ்பாகரன்- எம்.ஜே.எப், கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் டாக்டர் கே.அருளானந்தம், லயன். கிழக்கு ஆளுனர் சபை பிரதி செயலாளர் டாக்டர் ஏ.செல்வேந்திரன், டாக்டர். வைத்தியர் ஏஞ்சலா அருட்பிரகாசம், லயன். சந்திரகாந்தா (எம்.ஜே.எப்), லயன்.எஸ்.சடாச்சரராஜா- எம்.ஜே.எப், லயன்.செல்வராசா-எம்.ஜே.எப்  உள்ளிட பலர் கலந்துகொண்டனர்.