புதுப்பொலிவுபெறும் கல்முனை ஆதாரவைத்தியசாலையின் வெளிநோயாளர்பிரிவு இருக்கைகளும் வாகனத்தரிப்பிடமும்!

 சகா)
 
கிழக்கில் புகழ்பூத்த கல்முனை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர்பிரிவு இருக்கைகள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அது புதுப்பொலிவுடன் காணப்படுகின்றது. 
 
அங்கிருந்த பழைய இருக்கைகள் அகற்றப்பட்டு நோயாளிகள் சௌகரியமாக இருப்பதற்கு வசதியாக நவீன  கண்ணாடி இழைகளாலான இருக்கைகள் (யுiசிழசவ ஊhயசை) பொருத்தப்பட்டுள்ளன.
 
வைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியின்பேரில் வைத்தியசாலை பல கோணங்களிலும் வரலாறுகாணாதவகையில் அபிவிருத்தி கண்டுவருகின்றது.
 
அதன் ஓரங்கமாக அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்திலிருற்து கொள்வனவுசெய்யப்பட்ட இச்சௌகரிய இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால் நோயாளிகள் மனத்திருப்தியுடன் சௌகரியமாக இருந்து சிகிச்சைபெற்று வருவதை அவதானிக்கக்கூடியதாயுள்ளது.
 
அதேவேளை வைத்தியசாலைக்கு வரும் மக்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக புதியதொரு வாகனத்தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது.
 
வைத்திய அத்தியட்சகர் டாக்டர் முரளீஸ்வரன் சிங்கப்பூர் சென்றிருந்தவேளை இத்தகைய தரிப்பிடத்தைக்கண்டு இங்கும் அமைக்கவேண்டுமென்றெண்ணி அதனை சற்று மாற்றத்துடன் அழகாக அமைத்துள்ளார்.
 
இதனால் வைத்தியசாலைக்குவரும் பொதுமக்கள் தமது வாகனங்களை பாதுகாப்பாக வெயில்மழை படாமல் நிறுத்திவைக்கமுடிகிறது. இதற்காக மக்கள் வைத்தியஅத்தியட்சகருக்கு நன்றிதெரிவிக்கின்றனர்.