சமூகப்பிரச்சினைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லாமலாக்குவது, இளைஞர்களது பொறுப்பாகும்.

சமூகப்பிரச்சினைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லாமலாக்குவது, இளைஞர்களது பொறுப்பாகும். என மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தெரிவித்தார்.

மண்முனை தென்மேற்கு இளைஞர், யுவதிகளுக்கான மூன்று நாள் பயிற்சி முகாமின் இறுதிநாளாகிய இன்று(09) வியாழக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், அங்கு, அவர் உரையாற்றுகையில்,

சமூகத்தில் பல பிரச்சினைகள் நடைபெறுகின்றன. அவ்வாறான பிரச்சினைகள் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்படக்கூடாது. இதற்காக இளைஞர்கள் பொறுப்புடன் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். நாம் கற்பதனை வாழ்க்கையோடு பயன்படுத்த வேண்டும். இதற்காக கற்கின்ற விடயங்கள் தொடர்பில், எமக்குள்ளே உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத பிரச்சினைகள் அதிகம் உள்ளன. இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய விடயங்களை கற்க வேண்டும். அதேவேளை ஏனையவர்களுடன் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும். எதிர்கால மக்களுடைய இருப்பும், சமூகப்பிரச்சினைகள் இல்லாத சமூகத்தினை உருவாக்குவதும் இளைஞர்களின் கையிலே தங்கியுள்ளன. என்றார்.