யானைகளினால் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட தென்னைமரங்கள் அழிக்கப்பட்டுள்ளன

மட்டக்களப்பு மாவட்டத்தில்கோறளைப்பற்றுவடக்கு(வாகரை), கோ.ப.தெற்கு(கிரான்), ஏ.பற்று(செங்கலடி), ம.மேற்கு(வவுணதீவு), ம.தெ.மேற்கு(பட்டிப்பளை), போரதீப்பற்று (வெல்லாவெளி) போன்ற பிரதேசசெயலாளர் பகுதிகளில் 2006ம்ஆண்டு தொடக்கம் 2018வரையும் என்றும் இல்லாதவாறு 100க்கு மேற்பட்ட காட்டு யானைகள் இப்பகுதியிலுள்ள கிராமங்களுக்குள் புகுந்து பயன் தரும் மரங்கள், விவசாய மேட்டுநிலப்பயிர்கள், வேளாண்மைச் செய்கை, ஏனைய மக்கள் வாழும்வீடுகள் போன்றவற்றை அழித்தும், சேதப்படுத்தியும் சில மனிதர்களுக்கு உயிராபத்தையும், காயங்களையும் ஏற்படுத்தியும் 10வருடங்களுக்கு மேலாக காட்டு யானைகள் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

காட்டுயானைகளினால் 10வருடங்களுக்கு மேலாக அழிக்கப்பட்ட பயன்தரும் மரங்கள் குறிப்பாக தென்னை மரங்கள் ஒருவருடம் இருந்து 20வருடங்களுக்கு உட்பட்ட சுமார் ஆறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் எழாயிரத்திற்கு மேற்பட்ட தென்னை மரங்களை அழித்தும் சேதப் படுத்தியும், எதிர்வரும் காலங்களில் மனிதர்களுக்கான வாழ்வாதாரத்தை இல்லாமல் செய்து இருக்கின்றன.  மீண்டும் தென்னைமரம், பலாமரம், வாழைமரம் போன்றவை நடுவதற்கான விசேட திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.

2.எல்லைப்பகுதிகளிலுள்ள கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள யானைவேலிகளை யானைகள் உடைத்து மாலைநேரம் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதும் அதிகாலை காட்டுப்பக்கம் மீண்டும் வேலியை உடைத்து வெளியில் செல்வதும் கிட்டத்தட்ட 15 இடங்களில் ஒவ்வொரு நாளும் நடைபெறுகின்றன. இதைத்தடுத்து நிறுத்துவதற்கு யானைவேலிகளை உடைக்காமல் இருப்பதற்கு பாதுகாப்புக்கு ஆட்களை நியமித்தல்.

3.குறிப்பாக, விவசாயம் செய்யும் காலங்களில் யானைகளிடமிருந்து வேளாண்மை, மேட்டு நிலப்பயிர்ச் செய்கையை பாதுகாக்க விவசாய அமைப்புக்கள் எல்லைக் கிராமங்களிலுள்ள பொதுஅமைப்புக்கள், வனவிலங்குத்திணைக்களம் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரு விசேட திட்டங்களைத் தயாரித்தல்.

யானைகளைப் பொறுத்தவரையில் 10வருடங்களுக்கு மேலாக அழிவுகள் நடந்து வருவதோடு யானைகளின் வரவும் அதிகரிக்கப்படுகின்றன. இவைமட்டுமின்றி அழிவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த அழிவுகள் தொடர்ச்சியாக இடம் பெறுமானால் எல்லைக்கிராமமக்கள் வறுமையில் வாடுவதோடு, விவசாயம் செய்வோர் வறுமையில் வாடவேண்டிய நிலைமைக்கு உள்ளாக்கப் படுவார்கள் அவைமட்டுமின்றி கடந்த காலத்தில் அழிக்கப்பட்ட பயன்தரும் மரங்களை மீண்டும் நடாமல் போனால் தேங்காய்க்கு பஞ்சம் ஏற்படும்.

எனவே மேற்குறிப்பிடப்பட்டுள்ள மூன்று திட்டங்களில் யானைவேலிகளுக்கு பாதுகாப்பு கடமைகளில் ஆட்களை நியமித்தால் மாத்திரமே ஏனைய விடயங்களை கையாள முடியும்.