மொறவேவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 5ம் வாய்கால் பகுதியில் நீர்பற்றாக்குறை

;பொன்ஆனந்தம்

மொறவேவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 5ம் வாய்கால் பகுதியில் நீர்பற்றாக்குறை காரணமாக ஈவு அடிப்படையில் காணி ஒதுக்கப்பட்டதில் பல காணி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

பாதிக்கப்பட்ட விசாயிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட றிற்மனுவிற்கான ஆட்சேபனையை சமர்பிக்குமாறு திருகோணமலை மேல்நீதிமன்றம் நேற்;று உத்தரவிட்டது.

திருகோணமலை மொறவேவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பன்குளம் 5ம் வாய்கால் பகுதியில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக விவசாயச் செய்கைக்கு நீர்பற்றாக்குறை காரணமாக ஈவு அடிப்படையில் காணி ஒதுக்கப்பட்டது.இதில் பல காணி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி,

பாதிக்கப்பட்ட விசாயிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட றிற்மனுவிற்கான ஆட்சேபனையை வரும் 29.08.2018ம்திகதி சமர்பிக்குமாறு கோரியே திருகோணமலை மேல்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பான வழக்கு திருகோணமலை மேல்நீதிமன்றில் நேற்று நண்பகல் எடுத்துக்கொண்டபோதே மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளம்செழியன் இவ்வுத்தரவை பிறப்பித்தார்.

இவ்வழக்கில் பிரதி வாதிகளாக மொறவேவ பிரதேச செயலாளர்,திருகோணமலை மாவட்ட அரச அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கை பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பாக முதலிக்குளம் 5ம் வாய்கால் விவசாய சங்கத்தின் தலைவர்சி.அமிர்தலிங்கம்,மற்றும் உறுப்பினர் த.கோடீஸ்வரன் சார்பாக அவர்களது சட்டத்தரணி கடந்த 9.07.2018 அன்று தாக்கல் செய்திருந்தனர்.

ஆயினும் ஆட்சேபனையை சமர்ப்பிப்தற்காக இன்றைய தினம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று இவ்விடயம் நீதிமன்றில் எடுத்துக்கொண்டபோதும் ஆடசேபனை தாக்கல் செய்யப்பட்டிருக்க வி;ல்லை. மாறாக கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்தே வரும் 29.08.2018 திகதியை வழங்கியதுடன் காலம் தாழ்த்தவேண்டாம் என நீதவான் கண்டிப்பான பணிப்புரைவிடுத்தார்

குறித்த 5ம் வாய்கால்பகுதியில் ஈவு அடிப்படையில் காணி ஒதுக்குகையில் காணி உரித்தாளிகள் 60பேருக்கு மேல் காணி வழங்கப்படவில்லை மாறாக வேறு பிரதேச விவசாயிகளுக்கு இவ்விசாயிகளின் காணிகள் பகிர்ந்து ஒதுக்கப்பட்டது என பாதிக்கப்பட்ட விவசாயிகள் பிரதேச செயலாளர்,அரசாங்க அதிபர், ஜனாதிபதி உள்ளிட்ட பலருக்கும் எழுத்துமூலம் அறிவித்திருந்தனர்.

பின்னர் மாவட்ட அபிவிருத்திக்குளுவில் பாதிக்கப்;பட்ட விவசாயிகளுக்கு காணி ஒதுக்க தீர்மானம் மேற்கொண்டபோதும் அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை .என விவசாய சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையிலேயே விவசாயிகள் நீதிமன்றின் உதவியை நாடியுள்ளனர்.என விவசாய சங்கத்தலைவர் தங்களது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்