ஆசிரியையின் கொலை தொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்டமையினால் இருவருக்கும் மரண தண்டனை

;பொன்அனந்தம்

திருகோணமலை மாவட்டம் மூதூர்பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாட்டாளிபுரம் பாமகள் வித்தியாலய ஆசிரியையின் கொலை தொடர்பான குற்றம் நிரூபிக்கப்பட்டமையினால் எதிரிகளான இருவருக்கும் மரண தண்டனை வழங்கி திருகோணமலை மேல்நிதிமன்றம் இன்று திர்ப்பு வழங்கியது.

மேலும் இருவருக்கெதிரான குற்றம் சந்தேகத்திடமின்றி அரச தரப்பால் நிரூபிக்கத்தவறியமையினால் அவர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் தனது தீர்ப்பில் மேலும் தெரிவித்தது.

இவ்வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நேற்றுமுன்தினம் தினம் காலை 11.00 மணியளவில் ; மேல்நீதிமன்றத்தில் இக்கொலைதொடர்பான இறுதி தீர்ப்பு மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளம்செழியன் அவர்களால் வழங்கப்பட்டது.

கொலையை நேரடியாக பார்த்த சாட்சிகள் எவரும் இல்லாதபோதும் சந்தர்பம்,சூழ்நிலை,கொலையுண்டவரின் தாய், பொது மக்கள் பாடசாலை ,அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சாட்சியங்களுக்கிணங்கவும் தடையங்களின் அடிப்படையிலும் மிகமுக்கியமாக சட்டவைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனை சாட்சியங்களுக்கமைவாகவும் எதரிகள் இருவரின், நேரடி கூண்டு வாக்குமூலத்திற்கிணங்கவும் குறித்த ஆசிரியையான குருகலசிங்கம் ஸ்ரீவதனி அணிந்திருந்த நகைகளை கொள்ளையிடும் பொது நோக்கினடிப்படையில் எதிரிகளால் மிகக்கொரூரமாக புரியப்பட்ட கொலை” என்பது நிரூபணமாகின்றது என மன்று கருதுவதனால் இம்மரணதண்டனை வழங்குவதாக நீதிமன்றால் அறிவிக்கப்பட்டது.

கடந்த 24.11.2013 அன்று மூதூர் பிரதேச செயலாளர்பிரிவில் உள்ள பாட்டாளிபுரத்திற்கும் சந்தோசபுரத்திற்கும் இடைப்பட்ட புதர்பகுதியில் நடந்த இப்படுகொலையுடன் தொடர்புபட்டதாக விசாரணைகளில் இனம் காணப்பட்ட நான்கு எதிரிகளை மூதூர் பொலிசார் மன்றில் முன்நிலைப்படுத்தியிருந்தனர்.

இதில் முதலாவது எதிரியான பாலசிங்கம் நகுலேஸ்வரன் மற்றும் இரண்டாம் எதிரியான வி.சந்திரபாலன் என்பவர்களுக்கெதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டநிலையிலேயே மரணதண்டனை வழங்கப்பட்டது.

குறிந்த எதிரிகளுக்கெதிராக சட்டமாதிபர் திணைக்களத்தினால் கொலைக்குற்றத்தின்கீழ் திருகோணமலை மேல்நீதிமன்றில் வழக்கு 2016இல் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவந்தன.இந் நிலையில் இன்றைய தினம் இவ்வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஏனைய எதிரிகளான கி.ரஜீவ்காந்தன்,சி.சிவரூபன் என்பவர்களே குற்றம் ;நிரூபிக்கப்படாதநிலையில் விடுவிக்கப்பட்டனர்.

இன்றைய தீர்பின்போது எதிரிகள் தரப்பில் சட்டத்தரணி எம்.ஐ.நௌபிக் ஆஜாரகியிருந்தார். அரச தரப்பில் அரச சட்டத்தரணி ஆஜாராகியிரந்தனர்.மிகுந்த பரபரப்பிற்கு மத்தியில் இத்தீர்ப்ப அறிவிக்கப்பட்டது.

இவ்வழக்கின்விசாரணைகளின்போது,குறித்த கொலையானது சம்பவ தினமான 24.11.2013 அன்று காலை 7.30 மணிக்கும் 8.00 மணிக்குமிடையில் இடம்பெற்றிருப்பதாக பொலிசார் மன்றில் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆசிரியை கட்டைபறிச்சான் கிராமத்தில் இருந்து வழமைபோல் தனது பாடசாலையான பாட்டாளிபுரம் பாமகள் வித்தியாலயத்திற்கு சிறிய மோட்டார் சைக்கிளில் சென்ற வேளை சந்தோசபுரத்திற்கு அடுத்தாற்போல் உள்ள ஆள்நடமாட்டம் குறைந்த வீதியில் இடைமறித்து புதர்பகுதியில்இழுத்துச்சென்று கூரிய ஆயுதத்தால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட நிலையில், கண்டெடுக்கப்பட்டார.;

புதரில் அனுங்கியபடி கிடந்த அவரைப்பற்றி பொது மக்கன் ஒருவரால் பாடசாலை அதிபர் அ.கலைச்செல்வனுக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அதிபர் எமது (பொலிசார்) கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார் என பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்;.

இந்நிலையில் சம்பவ இடத்தில் உள்ள பிரதான வீதியின் போக்கில் (நீர்கடவை)இருந்து 10,15 ஆடி தூரத்தில் புதருக்குள் அசிரியை வெட்டப்பட்டு இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அருகில் அவரது செருப்பும், உடைந்த நிலையில் தலைக்கவசமும் மோட்டார் சைக்கிளும் கண்டெடுக்கப்பட்டதாகவும பொலிசார்; தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக பலரிடமும் சாட்சியங்கள் பெறப்பட்ட நிலையில் சம்பவத்தைநேரடியாக கண்ட சாட்சிகள் கிடைக்க வில்லை. ஆயினும் எதிரிராளியான நகுலேஸ்வரன் குறித்த வீதியில் உள்ள போக்கில் 7.30 மணியளவில் கோடரி ஒன்றை தீட்டிய வண்ணமிருந்ததனை கண்டதாக இருவர் சாட்சியம்வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த எதிராளி மறைந்துள்ளதாக அறிந்த நிலையில், பொலிசார் சென்று அவர் கைக்குண்டு களை வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்.மறைந்திருந்தநிலையில் அவரை சுட்டு காயப்படுத்தியே பொலிசார் பிடித்ததாகவும் பின்னர் வைத்திய சாலையில் சிகிச்சை வழங்கியதாகவும் மன்றில் பொலிசார் விசாரணைகளில் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை மேலதிக விசாரணைகளில் மூலம் மற்றய எதிரராளியும் குறித்த ஆசிரியையிடமிருந்து எதிராளிகளால்’ களவாடப்பட்ட காப்பு, மோதிரம்,சங்கிலிஉள்ளிட்ட நகைகள் என்பனவும் விசாரணைகளில் இருந்து எதிராளிகளின் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டன. எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். மன்றில் பொலிசாரினால் சமர்ப்பிக்கப்பட்ட நகைகளை கொலையுண்ணடவரின் தாhய் திருமதி .குருகுலசிங்கம் பார்வையிட்டு குறித்த நகைகள் தனது மகளுடையதுதான் என உறுதி செய்திருந்தார். அவர் நீதிமன்றிலும் அவற்றை அடையாளம் காட்டியிருந்தார்.

இதேவேளை இவ்வழக்கின் முக்கியமான சாட்சியமான ,வைத்திய பரிசோதனை அறிக்கையில்,கூரிய ஆயுதத்தினாலும் மழுங்கிய ஆயதத்தினாலும் தாக்கி,வெட்டி இக்கொலைபுரியப்பட்டுள்ளதுடன் இறந்தவரின் உடலில் 13 காயங்கள் உள்ளதாகவும் மன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையிலேயே இன்றைய பரபரப்பான மரணதண்டனை தீர்ப்பு மேல்நிதிமன்றத்தினால் வழங்கப்பட்டன.