பொதுச்சுகாதார பரிசோதகரை அடித்துக்கொலை செய்ததாக கொலைக்குற்றம் சாட்டில் கைதானவருக்கு கடுழிய சிறைத்தண்டனை

பொன்ஆனந்தம்

திருகோணமலை தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள முள்ளிப்பொத்தானைப்பகுதியில் டெங்கு விழப்புணர்வு கடைமையில் ஈடுபட்டிருந்த பொதுச்சுகாதார பரிசோதகரை அடித்துக்கொலை செய்ததாக கொலைக்குற்றம் சாட்டில் கைதானவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் 10 ஆண்டு கடுழிய சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.

குறித்த குற்றவாளி குற்றம்புரிந்த நேரத்தில் காணப்பட்ட மன நிலமையைக்கருத்தில் எடுத்த நீதிமன்றம் சட்டரீதியாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கவேண்டிய தண்டனையைக்குறைத்து 10 ஆண்டு கடுழியசிறைத்தண்டனையாக வழங்குவதுடன் 10,000ரூபாய் தண்டமும் விதிக்கப்படுகின்றது என அறிவித்தது.

அதனைக்கட்டத்தவறும் பட்சத்தில் மூன்று மாதம் சிறைத்தண்டனையையும் அனுபவிக்கநேரிடும் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த 9.7.2012 அன்று நடந்த இக்கொலைசம்பவத்தின் ஆரம்ப விசாரணைகள் கந்தளாய் நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்தநிலையில், சட்டமாதிபர் திணைக்களத்தினால் திருகோணமலை மேல்நீதிமன்றத்திற்குப்பாரப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் இவ்வழக்கின் தீர்ப்பு மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளம்செழியனால் வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை ,சாலியபுர கிராமத்தில் டெங்கு பரிசோதனைக்குச்சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர் குளு மீது எதிரி பொல்லால் தாக்குதல் நடாத்தியுள்ளார்.

இதன்போது கடுமையான தாக்குதலுக்குள்ளன பொதுச்சகாதாரப்பரிசோதகரான முகமட் பழில் என்பவர் இறந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்தது.

சாலியபுரப்பகுதியில் உள்ள செனவிரத்தின முதியானசலாகே

வெல்கம என்பவரது வீட்டில் டெங்கு பரிசோதனை செய்யச்சென்ற பொதுச்சுகாதாரப்பரிசோதகர் குழுமீதே வீட்டுரைமையாளரான எதிரி வெல்கம பொல்லால் தாக்கியுள்ளார்.

பொல்லால் தாக்கவந்தமையை உணர்ந்த ஏனைய அதிகாரிகள் ஓடிய நிலையில் துரதிஸ்ரவசமாக அகப்பட்ட பழிலை பல முறை எதிராளி தலையில் “மொன டெங்கு” எனக்கூறி தாக்கியதாக பொலிசார் மன்றில் சாட்சியமளித்துள்ளனர்.

அரச சட்டவைத்திய அதிகாரியின் சாட்சியத்தில் குறித்த பொதுச்சுகாதாரபரிசாதகரின் தலையில் 6 காயங்கள் ,எலும்பு உடைவுகள் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். சம்பவத்தைநேரில் கண்ட சக பொதுச்சுகாதாரபரிசோதர்களும் சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.எதிராளி தொடர்பாக மனநல வைத்தியரும் சாட்சியத்தை வழங்கியுள்ளார்.

கொலைக்குற்றத்தின் கீழ் வழக்கு சட்டமாதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தபோதும் குறித்த நபரின் மனநிலை பாதிப்பு தொடர்பான அரச சட்டவைத்திய அதிகாரியின் வைத்திய அறிக்கைக்கு இணங்க சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட “கொலைக்குற்றச்சாட்டை” “கைமோசக்கொலைக்குற்றச்சாட்டாக நீதிமன்றம் கருதி தீர்ப்பை வழங்கியது.

இதனால் மரணதண்டனையாக வழங்கவேண்டிய தண்டனை 10ஆண்டு கடுழியமாக குறைக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது.

குறித்த நபர் ஒரு மனநோயாளியல்ல, மாறாக சில சமயங்களில் மன அழுத்தங்களுடன் காணப்பட்டுள்ளார். சம்வத்தின்போது விடயதானங்களில் தெளிவுடனும் இருந்துள்ளார். மட்டுமன்றி அரச அதிகாரி கடமையின் போது தாக்குதலுக்குள்ளாகி இறந்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்ப சூழ்நிலையைக்கருத்தில் கொண்டு இத்தீர்ப்பு வழங்கப்பட்டதாக நீதவான் அறிவித்தார்.

திருகோணமலை மேல் நீதிமன்றம் 10 ஆண்டு கடுழிய சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது. குறித்த குற்றவாளி குற்றம்புரிந்த நேரத்தில் காணப்பட்ட மன நிலமையைக்கருத்தில் எடுத்த நீதிமன்றம் சட்டரீதியாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கவேண்டிய தண்டனையைக்குறைத்து 10 ஆண்டு கடுழியசிறைத்தண்டனையாக வழங்குவதுடன் 10,000ரூபாய் தண்டமும் விதிக்கப்படுகின்றது என அறிவித்தது.

அதனைக்கட்டத்தவறும் பட்சத்தில் மூன்று மாதம் சிறைத்தண்டனையையும் அனுபவிக்கநேரிடும் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

கடந்த 9.7.2012 அன்று நடந்த இக்கொலைசம்பவத்தின் ஆரம்ப விசாரணைகள் கந்தளாய் நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்தநிலையில், சட்டமாதிபர் திணைக்களத்தினால் திருகோணமலை மேல்நீதிமன்றத்திற்குப்பாரப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் இவ்வழக்கின் தீர்ப்பு மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளம்செழியனால் வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் தம்பலகமம் பொலிஸ் பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை ,சாலியபுர கிராமத்தில் டெங்கு பரிசோதனைக்குச்சென்ற பொதுச்சுகாதார பரிசோதகர் குழு மீது எதிரி பொல்லால் தாக்குதல் நடாத்தியுள்ளார்.

இதன்போது கடுமையான தாக்குதலுக்குள்ளன பொதுச்சகாதாரப்பரிசோதகரான முகமட் பழில் என்பவர் இறந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்தது.

சாலியபுரப்பகுதியில் உள்ள செனவிரத்தின முதியானசலாகே

வெல்கம என்பவரது வீட்டில் டெங்கு பரிசோதனை செய்யச்சென்ற பொதுச்சுகாதாரப்பரிசோதகர் குளுமீதே வீட்டுரைமையாளரான எதிரி வெல்கம பொல்லால் தாக்கியுள்ளார்.

பொல்லால் தாக்கவந்தமையை உணர்ந்த ஏனைய அதிகாரிகள் ஓடிய நிலையில் துரதிஸ்ரவசமாக அகப்பட்ட பழிலை பல முறை எதிராளி தலையில் “மொன டெங்கு” எனக்கூறி தாக்கியதாக பொலிசார் மன்றில் சாட்சியமளித்துள்ளனர்.

அரச சட்டவைத்திய அதிகாரியின் சாட்சியத்தில் குறித்த பொதுச்சுகாதாரபரிசாதகரின் தலையில் 6 காயங்கள் ,எலும்பு உடைவுகள் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். சம்பவத்தைநேரில் கண்ட சக பொதுச்சுகாதாரபரிசோதர்களும் சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.எதிராளி தொடர்பாக மனநல வைத்தியரும் சாட்சியத்தை வழங்கியுள்ளார்.

கொலைக்குற்றத்தின் கீழ் வழக்கு சட்டமாதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தபோதும் குறித்த நபரின் மனநிலை பாதிப்பு தொடர்பான அரச சட்டவைத்திய அதிகாரியின் வைத்திய அறிக்கை;கு இணங்க சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட “கொலைக்குற்றச்சாட்டை” “கைமோசக்கொலைக்குற்றச்சாட்டாக நீதிமன்றம் கருதி தீர்ப்பை வழங்கியது.

இதனால் மரணதண்டனையாக வழங்கவேண்டிய தண்டனை 10ஆண்டு கடுழியமாக குறைக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது.

குறித்த நபர் ஒரு மனநோயாளியல்ல, மாறாக சில சமயங்களில் மன அழுத்தங்களுடன் காணப்பட்டுள்ளார். சம்வத்தின்போது விடயதானங்களில் தெளிவுடனும் இருந்துள்ளார். மட்டுமன்றி அரச அதிகாரி கடையின் போது தாக்குதலுக்குள்ளாகி இறந்துள்ளார். இவ்வாறான சந்தர்ப சூழ்நிலையைக்கருத்தில் கொண்டு இத்தீர்பு வழங்கப்பட்டதாக நீதவான் அறிவித்தார்.