திருமலையில் மாணவி வன்புணர்வு சிறிய தந்தைக்கு 20 வருட சிறைத்தண்டனை

பொன்ஆனந்தம்

திருகோணமலை அத்தபந்திபேவ பகுதியில் 11 வயது மாணவி ஒருவரைக் வன்பணர்வுக்குட்படுத்தி துஸ்பிரயோகம் செய்த சிறிய தந்தைக்கு 20 ஆண்டு கடுழியசிறைத்தண்டனை வழங்கி திருகோணமலை மேல்நிதிமன்றம் இன்று காலை 11.00மணியளவில் தீர்ப்பளித்தது.

அத்தபந்திபேபவில் 2004.06.21 அன்று தாய்தந்தையர் இருவரும் வீட்டில் இல்லாத சமயத்தில் குறித்த சிறுமியை அவரது சிறிய தந்தை பலாத்காரம் செய்து துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்று காலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளம்செழியன் முன்நிலையில் எடுத்துக்கொகள்ளப்பட்டது.

இதன்போதே மேற்படி தீர்ப்பை நீதிபதி வழங்கினார்.

அத்துடன் 10,000ரூபாதண்டபணமும் வழங்கவேண்டும் தவறும் பட்சத்தில் ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் அதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து(5) லட்சம் ரூபாய் நஸ்ர ஈடாகவும் வழங்க வேண்டும் எனவும் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளம் செழியன் தனது திர்ப்பில் மேலும் தெரிவித்தார்.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மேல் நிதிமன்றத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கின் எதிரி தலைமறைவாகியுள்ளார். வழக்கு விசாரணைகளில் அவரை பொலிசார் ஆஜார் படத்தியிருக்கவில்லை எனத்தெரிவித்த நீதிபதி குறித்த எதிரியை உடன் தேடிப்பிடித்து குறித்த தண்டனைக்கு உட்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளாக பாதிக்கப்பட்ட குழந்தை, மற்றும் குழந்தையின் தாயாரும், வைத்திய அதிகாரியின் சாட்சியமும் கவனிக்கப்பட்டது. அத்தபந்திவேவையைச்சார்ந்த சமிந்த பண்டார திசாநாயக்க என்பவரே குறித்த 11 வயது மாணவியான சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளார் என்பது சந்தேகத்திடமின்றி மன்றில் நிரூபணமாகியநிலையிலும் குற்றவாளி மன்றில் ஆஜாராகாமல் தலைமறைவாகியுள்ள நிலையிலும் இந்த தீர்ப்பை நீதிபதி வழங்கினார்.

“இந்த தீர்ப்பில் இந்திய நீதிமன்றங்களின் இவ்வாறான குற்றங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புகளும் பின்பற்றப்படுகின்றது. பெண்களுக்கெதிரான குற்றச்செயல்களில் இருந்து அவர்களைப்பாது காப்பது நீதிமன்றங்களின் கடமையாகும். எவரும் மேற்குறிப்பிட்டதான குற்றங்களைப்புரிந்து விட்டு தப்பிக்க முடியாது. சமூகம் இவ்வாறான குற்றங்களுக்கான கடுமையான தண்டனைகளை நீதிமன்றங்கள் வழங்க வேண்டும் என போராடிவருகின்றது.

சட்டத்தில் உள்ள உச்சபட்ச தண்டனையை இதற்கு வழங்கவேண்டும் என்ற இந்திய நீதிமன்றங்களின் தீர்ப்புகள் ஆய்வுக்கு மன்று கருத்தில் எடுத்துக்கொண்டு இன்றைய இத்தீர்ப்பு வழங்கப்படுகின்றது எனவும் நீதிபதி மன்றில் தெளிவு படுத்தினார்.

வைத்திய அதிகாரி யின் சாட்சியத்தில், குறித்த சிறுமி துஸ்பிரயோகப்படுத்தப்பட்டதை உறுதி செய்ததுடன் சிறுமி ரத்தப்பெருக்கினால் சோர்வுற்றிருந்ததாகவும் பின்னர் பெண்ணுறுப்பில் சத்திரசிகிச்சையும் செய்ய நேர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது தாயரும் முக்கியமான சாட்சியங்களை வழங்கியிருந்ததாக தீர்ப்பில் நீதிபதி சுட்டிக்காட்டினார்.