கொக்கட்டிச்சோலை பிரதேசசபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு  பிரதேசசபையின் உத்தியோகத்தர்களும் உறுப்பினர்களும் இன்று (08) காலை கவனயீர்ப்பு போராட்டமென்றை முன்னெடுத்தனர்.

கொக்கட்டிச்சோலைப் பகுதியில் கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது, சிலர் கொலை அச்சுறுத்தல் விடுத்ததுடன், உத்தியோகத்தர் ஒருவர் மீதும் தாக்குதலும் நடத்தப்பட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இவ்வாறான நிலையில், பிரதேசசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் தமது கடமையை செய்யமுடியாத நிலையேற்படுத்தப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

tx tamilmirror