மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவராக கலாநிதி எம்.பி. ரவிச்சந்திரா

 

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் நடப்பு வருடத்திற்கான நிர்வாகக் குழு அண்மையில் தெரிவு செய்யப்பட்டது.

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் நடப்பு வருடத்திற்குரிய நிர்வாகக் குழுவைத் தெரிவு செய்வதற்கான பொதுக் கூட்டம் அண்மையில் கலாசாலையின் விபுலானந்த மண்டபத்தில் அதிபர் ப.பரமேஸ்வரனின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ்; நடைபெற்றது.

இதன்போது, சங்கத்தின் போஷகராக கலாசாலையின் அதிபர் ப. பரமேஸ்வரன் தொடர்ந்து பதவி வகிக்க நடப்பு வருடத்திற்கான சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக பின்வருவோர் கல்விசார் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர்.

இதன் பிரகாரம், சங்கத்தின் நடப்ப வருடத்திற்கான தலைவராக கலாநிதி எம்.பி. ரவிச்சந்திரா தெரிவு செய்யப்பட்டார். அத்துடன்;, எம்.எம்.ஏ.சமட் செயலாளராகவும் திருமதி ஏ.எம். பிரகலாதன் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன், உப தலைவராக டி. கமிலஸ் மற்றும் உப செயலாளராக சி. துலக்ஷன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன், ரி.குவேந்திரன், ஆர். ரதன், கயல்விழி காந்தராஜா மற்றும் வி. செல்வராஜா ஆகியோர் செயற்குழ உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். 29 உறுப்பினர்களைக் கொண்ட மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையின் ஊழியர் நலன்புரிச் சங்கமானது கடந்த பல ஆண்டு காலமாக ஊழியர்களின் நலன்களுக்காக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.