திருமலையில் ஜனாதிபதி கிழக்குப்பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

கதிரவன் திருகோணமலை

கிழக்கு பல்கலைக்கழகம் திருகோணமலை வளாகத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செவ்வாய்க்கிழமை 2018.08.07 மாலை விஜயம் செய்தார். அங்கு 740 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட உள்ள உள்ளக அரங்குடன் கூடிய கேட்போர் கூடம் அடங்கிய பல்தேவைக் கட்டிடத்துக்கான அடிக்கல்லினை நட்டு வைத்தார்.

இந் நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜக்ஸ, விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகல்லாகம, பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழு தலைவர் ரோசிரியர் மொகான் டி சில்வா, பொலிஸ் மா அதிர் பூஜித ஜெயசுந்தர, திருகோணமலை நகர சபைத்தலைவர் நா.ராசநாயகம். பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் மருத்துவர் ஈ.ஜி.ஞாகுணாளன், அரச அதிகாரிகள். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள். உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

திருகோணமலை வளாகத்தின் முதல்வர் க.கனகசிங்கம் ஜனாதிபதியையும் பிரமுகர்களையும் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து 340 மில்லிய் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்ட 5 தளங்களைக் கொண்ட பிரயோக விஞ்ஞான பீட கட்டிடத்தினையும் திறந்து வைத்தார்.

இதேவேளை தொடரபாடல் கற்கை நெறி மாணவர்கள் தங்களுக்கான வகுப்பு தடையினை நீக்க கோரி வளாக முன்றலில் எதிரப்பு; நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். பொலிசார் இவர்களை வளாகத்திற்கு நுழைய முடியாதவாறு தடைகளை ஏற்படுத்தி மறித்திருந்தனர். நிலைமையை கட்டுப்படுத்த கலகம் அடக்கும் பொலிசாரும் அங்கு பணியில் அமர்த்தப்பட்டு இருந்தார்கள்.