திருகோணமலை மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடியை தடைசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்.

கதிரவன் திருகோணமலை

திருகோணமலை மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடியை தடைசெய்யக்கோரி புதன்கிழமை 2018.08.08 காலை 10 மணிக்கு மணிக்கூண்டு கோபுரத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இதனால் மீன்சந்தையில் வியாhர நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு இருந்தது. மீன்சந்தையும் பூட்டப்பட்டது.
இதனால் அவ்விடத்தில் பொது பயணிகள் போக்குவரத்து தடைப்பட்டு இருந்தது.
பின்னர் அங்கிருந்து கடற்டைத்தள வீதி. தபால் கந்தோர் வீதி, உட்துறைமுக வீதி வழியாக மீன்பிடித்திணைக்கள அலுவலகத்திற்கு சென்று அங்கு மறியல் போராட்டத்திலும் ஈடுட்டனர்.