தொந்தியை குறைக்க சரியான வழி : கொக்கட்டிச்சோலையில் விழிப்புணர்வு ஊர்வலம்.

தேசிய போசாக்கு மாதத்தினை முன்னிட்டு மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும், வேள்ட்விஸன் நிறுவனமும் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலமொன்றை இன்று(7) செவ்வாய்க்கிழமை நடாத்தினர்.
கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான குறித்தஊர்வலம் மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் வரை வருகைதந்து நிறைவுபெற்றது.

ஊர்வலத்தில், சுகாதார வைத்திய அதிகாரி, மகிழடித்தீவு வைத்திய அதிகாரி, சுகாதாரசேவை உத்தியோகத்தர்கள், வேள்ட்விஸன் நிறுவன உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தாய் குழுவினர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் கலந்து கொண்டிருந்தோர், தொந்தியை குறைக்க சரியான வழி, துரித உணவுகளைத் தவிர்ப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும், தவிர்க்க வேண்டிய உணவு, உட்கொள்ள வேண்டிய உணவு தொடர்பிலான காட்சிப்பட பதாதைகளையும் கையிலேந்திருந்தனர்.