பன்முகஆளுமையுள்ள ,ஒழுக்க்சீலமுள்ள தலைவர்களாக இஞைர்கள்உருவாக வேண்டும்- ஞாஸ்ரீநேசன்

கருத்திட்ட முகாமைத்துவ இளைஞர் விவகார மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு தேசிய இளைஞர்சேவைகள் மன்றத்தின் அனுசரனையில் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் இளைஞர்சமூகப்போருப்பாளராகும் தலைமைத்துவ பயிற்சி முகாமானது 03.04.05 ஆகிய தினங்களில் மண்முனை மேற்கு குறிஞ்சாமுனை அ,த,க பாடசாலை கேட்போர்கூடத்தில் இளைஞர்சம்மேளனத் தலைவர் செல்வன் விமல்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் மண்முனை மேற்கு பிரதிக்கல்வி பணிப்பாளர் சுரனுதன் மற்றும் மண்முனை மேற்கு இளைஞர்சேவை உத்தியோகஸ்தர் சசீந்திரன் எனப் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மனிதப் பருவங்களில் மிக முக்கியமான பருவம் இளைஞர் பருவம் என்றும், இப்பருவம் சாதனைகள் புரிவதற்கு சாதகம் கூடிய பருவம் என்றும் குறிப்பிட்டார்.

எனவே இளைஞர்கள் பன்முக ஆளுமையுள்ள ஒழுக்கமுள்ளவர்களாக தம்மை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.நாளைய தலைவர்களாக இன்றைய இளைஞர்கள் தம்மை பல வழிகளிலும் ஆற்றல், திறன் உள்ளவர்களாக வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.தீய பழக்கங்களை தவிர்த்து நல்ல பண்புள்ளவர்களாக இஞைர்கள்உருவாக வேண்டும் என்றும் குறிப்பிடார்.