மட்டக்களப்பு கச்சேரிக்கு புதிய கணக்காளர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளராக கணக்காளர் தரம் ஒன்றைச் சேர்ந்த கந்தப்பன் ஜெகதீஸ்வரன் அவர்கள் அரச சேவைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பிரதம கணக்களாராக கடமையாற்றி வந்த எஸ்.நேசராசா கொழும்பு மிருககாட்சி சாலைக்கு பிரதம கண்ணகாளராக நியமிக்கப்பட்டதனையடுத்தே குறித்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கணக்காளர் சேவையில் சுமார் 27 வருட அனுபவங் கொண்ட இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள களுவாஞ்சிகுடி,வெல்லாவெளி, வவுணதீவு, மட்டக்களப்பு ஆகிய பிரதேச செயலங்களிலும் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும் கணக்காளராக கடமையாற்றியுள்ளார். இறுதியாக மட்டகளப்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய போதே குறித்த பதவியுர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.

யாழ் பல்கலை கழக்கத்தின் வணிகப்பட்டதாரியான இவர் வர்த்தக முதுமானி பட்டதாரியாகவும் காணப்படுவதடன் பட்டயம் பெற்ற அரச பொது நிதிக்கான கணக்காளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்….பழுகாமம் நிருபர்