கொல்லநுலையில் மின்கம்பத்திலிருந்து வீழ்ந்து பற்றைக்காட்டில் அகப்பட்டுள்ள மின்ணைப்பு வயர்.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட, கொல்லநுலை வீதியின் அருகில் அமைந்துள்ள மின்இணைப்பு வயர் மின்கம்பத்திலிருந்து வீழ்ந்து வீதியின் அருகில் உள்ள மரங்களில் தங்கியுள்ளது. இதனை நிவர்த்தி செய்து வழங்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த மின்இணைப்பு வயர் ஆறுமாதங்களுக்கு மேலாக அவ்வாறு, வீழ்ந்து கிடப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். குறித்த பகுதியிலிருந்த மின்கம்பமொன்று முறிந்து வீதியில் வீழ்ந்த சம்பவம் கடந்த தை மாதம் இடம்பெற்றிருந்தது. அன்று மக்கள் வழங்கிய தகவலுக்கமைய வீதியில் வீழ்ந்த மின்கம்பம் அகற்றப்பட்டிருந்த நிலையிலும், மின்ணிணைப்பு வயர் மின்கம்பத்தில் பொருத்தப்படவில்லை. இதனால் மின்னிணைப்பு வயர் சிறியளவிலான மரத்தில் தங்கி பற்றைக்காடுகளுக்குள் அகப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

வீதியின் அருகில் குறித்த வயர் கீழிறங்கி உள்ளமையினால், வீதியின் அருகில் தீ மூட்டப்பட்டால் வயர் தீப்பிடிப்பதற்கு சந்தர்ப்பமுள்ளதாகவும், சிறுவர்கள் வயரில் தொங்கி விளையாடுவதற்கும், அருகில் உள்ள சிறிய மரங்களை வெட்டுகின்ற போது, மின்னிணைப்பு வயருக்கு சேதம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பமுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுவதுடன், உரிய மின்னிணைப்பு வயரினை மின்கம்பத்தில் பொருத்துமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.