மண்முனை தென்மேற்கு பிரதேச அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டி முடிவுகள்.

இந்து சமய அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருதுக்கான, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டி முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

நடாத்தப்பட்ட பேச்சு, வில்லுப்பாட்டு, பரதநாட்டியம், நாடகம், பண்ணிசையும் பஜனையும், கதாப்பிரசங்கம் ஆகிய போட்டிகளுக்கான முடிவுகளே வெளியிடப்பட்டன.

பேச்சுப்போட்டியில் முதலிடங்களை தரம் – 1ல் மு.டனுசிக்கா என்ற மாணவியும், தரம் – 2ல் ஜீ.டிலுக்சன் என்ற மாணவனும், தரம் – 3ல் திதுசா என்ற மாணவியும், தரம் – 4ல், வி.டிசாலினி என்ற மாணவியும், தரம் 6ல் பு.நேனுஜன் என்றமாணவனும், தரம் – 7ல் க.லதுசன் என்ற மாணவனும், தரம் – 8ல் கி.தீபகாந்தி என்ற மாணவியும், தரம் – 9ல் ம.சர்மிலா என்ற மாணவியும், தரம் – 10ல் பு.தனுசங்கரி என்ற மாணவியும், தரம் – 11ல் கி.ஏஞ்சலா என்ற மாணவியும் பெற்றுக்கொண்டனர்.

கதாபிரசங்கப் போட்டியில் முதலிடங்களை, தரம் -1ல் ப.சகித்தியா என்ற மாணவியும், தரம் -2ல் தே.மோகனவர்சா என்ற மாணவியும், தரம் – 4ல் து.சேசாயினி முதலிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

வில்லூப்பாட்டில் முனைக்காடு இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலை முதலிடத்தினையும், பரதநாட்டியத்தில் முனைக்காடு இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலை முதலிடத்தினையும், நாடகப்போட்டியில், கொல்லநுலை விவேகானந்த அறநெறிப்பாடசாலை முதலிடத்தினையும், பண்ணிசையும் பஜனையும் போட்டியில் கொல்லநுலை விவேகானந்த அறநெறிப்பாடசாலை முதலிடத்தினையும் கொண்டன.