மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சி முகாம்.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் எதிர்வரும் செவ்வாய்(07), புதன்(08), வியாழன் (09) ஆகிய தினங்களில் முனைக்காடு விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளதாக பிரதேச இளைஞர்சேவை உத்தியோகத்தர் அ.தயாசீலன் தெரிவித்தார்.

கருத்திட்ட முகாமைத்துவ இளைஞர் விவகார மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையில், மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள குறித்த பயிற்சி முகாமில், தலைமைத்துவம், ஆளுமை வளர்ச்சிக்கும், மன அழுத்தத்தை குறைத்துக்கொள்வதற்குமான வழிகாட்டல் ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன.

பிரதேசத்தில் உள்ள 60இளைஞர், யுவதிகள் இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளவுள்ளனர்.