சிங்கப்பூரில் 5பதக்கங்களை வென்ற புனிதமிக்கல்

சிங்கப்பூரில் நடைபெற்ற தேசிய கணித வினா விடை போட்டில் மட்டு- புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் 11 பேர் பங்கேற்பு

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையிலிருந்து 11 மாணவர்கள் சிங்கப்பூரில் நடைபெற்ற தேசிய கணித வினா விடை போட்டியில் பங்குபற்றியிருந்தனர் .

இவர்களில் எஸ்.ஹரிஸ்னா , எஸ்.குகேசன் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும், என்.நேதுஜன், எம் எச். ஏ . ஷஹீல், ரி. இமயவன் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் ஜி.சந்திரேஸ், எஸ், பிரவிந் , என்.நாஹூல் , வி.சசாங்கன், டி.டிமெக்ஷன், இஸட்.பி. ஷைனி ஹஷன் சியா ஆகியோர் திறமை சான்றிதழ்களைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்,

படத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற தேசிய கணித வினா விடை போட்டியில் பங்கேற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களோடு இவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர் என். நவசீலன், கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா ஆகியோர் நிற்பதையும் படங்களில் காணலாம்.