இடைவேளையின் போது பெற்றோர்கள் மண்டபத்துக்குள் நுழையக்கூடாது.

இன்று புலமைப்பரிசில் பரீட்சை: புதிய நடைமுறை:
இடைவேளையில் பெற்றோர்கள் மண்டபத்தினுள் வரமுடியாது!
(காரைதீவு நிருபர் சகா)

இன்று(5)ஞாயிற்றுக்கிழமை நாடளாவியரீதியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.

3லட்சத்து55ஆயிரத்து 326மாணவர்கள் 3050பரீட்சை நிலையங்களில் பரீட்சை எழுதவிருக்கின்றனர்.

முதல் பாடம் 45நிமிடப்பத்திரமாகும். அது காலை 9.30க்கு ஆரம்பமாகின்றது. எனவே பெற்றோர்கள் பிள்ளைகளை 8.30மணிக்கு மண்டபத்திற்குகொண்டுவரவேண்டும்.

வழமைக்குமாறாக இம்முறை இரு பாடங்களுக்கிடையில் வரும் அரைமணிநேர இடைவேளையின்போது பெற்றோர்கள் பரீட்சைநிலையத்தினுள் செல்லமுடியாது . அதாவது பிள்ளைகளுக்குத் தேவையான சிற்றூண்டிகளை வழங்கமுடியாது.

எனவே அவர்களுக்குத் தேவையான தண்ணீர்ப்போத்தல்களை மெல்லிய உணவுடன் பரீட்சைக்குச்செல்லும்போதே கொடுத்தனுப்பவேண்டும் என பரீட்சை ஆணையாளர்நாயகம் சனத்பூஜித கேட்டுக்கொண்டுள்ளார்.
இரண்டாம் பாடம் 1மணி15நிமிடப்பத்திரமாகும். அது காலை 10.45மணிக்கு ஆரம்பமாகி 12மணிக்கு நிறைவடையும்