திருமலையில் உதைபந்தில் சம்பியனாக ஜமாலியா

dav

கதிரவன் திருகோணமலை

திருகோணமலை வளர்ந்தோர் உதைபந்து கழகம் நடத்திய 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயம் சம்பியனானது. ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை 2018.08.04 இச்சுற்றுப்போட்டி நடைபெற்றது. உவர்மலை விவேகானந்தா கல்லூரி, வித்தியாலோக ராஜகீய வித்தியாலயம். ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி, விபுலானந்தா கல்லூரி, ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயம் என்பன இதில் பங்கு கொண்டன. லீக் அடிப்படையில் முதல் சுற்று நடத்தப்பெற்று அதில் தெரிவாகிய நான்கு பாடசாலைகளுக்கு இடையே விலகல் முறையில் போட்டி நடத்தப்பெற்றது.

முதலாவது அரையிறுதி போட்டி வித்தியாலோக ராஜகீய வித்தியாலயத்திற்கும் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கும் இடையே நடைபெற்றது. இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறாத நிலையில் பெனால்டி உதைகள் வழங்கப்பட்டது. இதில் கோணேஸ்வரா இந்துக் கல்லூரி 3 கோல்களையும், ராஜகீய வித்தியாலோக வித்தியாலயம் கோல்கள் எதனையும் பெற்றுக் கொள்ளாத நிலையில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி வெற்றி பெற்றது.

இரண்டாவது அரையிறுதி போட்டி ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியலத்திற்கும் .விபுலானந்தா கல்லூரிக்கும் இடையே நடைபெற்றது. இதில் ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயம் 2 : 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இறுதிப்போட்டி ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கும் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கும் இடையே நடைபெற்றது. இதில் ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயம் 2 : 0 என்ற கோல் கணக்கில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியை வெற்றி கொண்டு சம்பியனாது.

dav
dav
dav
dav
dav
dav