கரும்புலிகள் குண்டுத் தாக்குதல் பிரிவு படையணியின் 150 பேர் இந்தோனேஷியாவில்?

  1. காணாமல் போனதாக கூறப்படும் கரும்புலிகள் குண்டுத் தாக்குதல் பிரிவு படையணியின் 150 பேர் இந்தோனேஷியாவின் வேடன் நகரிலுள்ள குடிபெயர்வு மத்திய நிலையத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களுக்கு ஐ.நா.வின் அகதிகள் காரியாலயத்தின் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் படகில் அவுஸ்திரேலியாவுக்கு செல்கையில், படக்கு செயற்படாமல் போனதனால் இந்தோனேஷியாவுக்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. பிரித்தானிய தமிழ் அகதிகள் கவுன்ஸில் இவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த 9 வருடங்களின் பின்னர் இவர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளதாக இன்றைய தேசிய சகோதார நாளிதழொன்று அறிவித்துள்ளது. (DC)