ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு மேற்ப‌ட்ட‌ முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை மாற்ற‌க்கோருவ‌த‌ற்கு இந்த‌ த‌மிழிச்சிக‌ள் யார்?

முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை மாற்ற‌ வேண்டும் என‌ ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு த‌மிழ் பெண்க‌ள் சில‌ர் ஆர்ப்பாட்ட‌ம் செய்திருப்ப‌த‌ன் மூல‌ம் இத‌னை திருத்த‌ வேண்டும் என்ப‌த‌ற்கு பின்னால் முஸ்லிம்க‌ள் அல்லாத‌ ட‌ய‌ஸ்போராவும் ஐரோப்பிய‌ர்க‌ளுமே உள்ள‌ன‌ர் என்ப‌தும் ப‌ண‌ம் வேலை செய்கிற‌து என்ப‌தும் தெளிவாகிற‌து என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.

அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,
முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை திருத்த‌ வேண்டும் என்ற‌ கோரிக்கைக்கு பின்னால்  பிற‌ ம‌த‌த்த‌வ‌ர்க‌ளே உள்ள‌ன‌ர் என்ப‌தை க‌ட‌ந்த‌ 10 வ‌ருட‌ங்க‌ளாக‌ உல‌மா க‌ட்சி சொல்லிவ‌ருவ‌தை இந்த‌ த‌மிழ் பெண்க‌ளின் ஆர்ப்பாட்ட‌ம் தெட்ட‌ தெளிவாக்கியுள்ள‌து.
அதே வேளை த‌மிழ் ம‌க்க‌ள் ம‌த்தியிலும் அர‌ச‌ ச‌ட்ட‌த்தை மீறி 16, 15 வ‌ய‌தில் பெண்க‌ள் திரும‌ண‌ம் இன்றும் ந‌ட‌க்கின்ற‌து.
அந்நாளில் வாழ்ந்த‌ த‌மிழிச்சிக‌ள்தான் இந்நாளிலும் வாழ்கின்ற‌ன‌ர்.  ஆங்கிலேய‌ர்க‌ள் முஸ்லிம் அல்லாத‌வ‌ர்க‌ள் திரும‌ண‌ம் முடிக்க‌ வேண்டும் என்றால் 18 வ‌ய‌தை க‌ட்டாய‌மாக்கியும் ச‌ட்ட‌த்தை மீறி 1954ல் ந‌டை பெற்ற‌ திரும‌ண‌ சான்றித‌ழே இது.
த‌மிழ் பெண்க‌ள் அப்போது 15 வ‌ய‌தில் திரும‌ண‌ம் முடிக்க‌ முடியும் என்றால் இப்போதும் முடிக்க‌லாம்.ஆனால் அர‌சிட‌ம் முறையிட்டால் ஜெயிலில்தான் குடும்ப‌ம் ந‌ட‌த்த‌ வேண்டி வ‌ரும்.
த‌மிழ் ம‌க்க‌ள் ம‌த்தியில் சிறுவ‌ய‌து திரும‌ண‌ம் நட‌ப்ப‌தை த‌டுக்க‌ இந்த‌ த‌மிழ் பெண்க‌ள் ஆர்ப்பாட்ட‌ம் செய்யாம‌ல் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை மாற்ற‌க்கோர‌ இவ‌ர்க‌ள் யார்?
த‌மிழ் ம‌க்க‌ளின் ம‌த‌த்தில் திரும‌ண‌த்துக்கான‌ வ‌ரைய‌றை இல்லாதிருக்க‌லாம்.  ஆனால்
 ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு மேற்ப‌ட்ட‌ முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தை மாற்ற‌க்கோருவ‌த‌ற்கு இந்த‌ த‌மிழிச்சிக‌ள் யார்?
ஆக‌வே முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் எத்த‌கைய‌ மாற்ற‌த்துக்கும் இட‌மளிக்க‌ முடியாது என‌ முஸ்லிம்க‌ளின் அமைப்புக்க‌ள் ஆர்ப்பாட்ட‌த்தில் ஈடுப‌ட‌ வேண்டும்.