ஓய்வு பெறும்திருகோணமலை கப்பல்துறை சரஸ்வதி வித்தியாலயத்தின் பிரதி அதிபருக்கு பாராட்டுவிழா.

திருகோணமலை கப்பல்துறை சரஸ்வதி வித்தியாலயத்தின் பிரதி அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச்செல்லும் திருமதி சந்திரலீலா சற்சிவானந்தம் அவர்களுக்கான பிரியாவிடை வைபவம் சனிக்கிழமை காலை 10.00மணிக்க வித்தியாலய அதிபர் சி.முரளிதரன் தலமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பல விருந்தினர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன் மாணவர்களின் பல கலைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. இதன்போது வித்தியாலயத்தில் இருந்த இடமாற்றம் பெற்றுச்சென்ற ஆசிரியர்களும் கௌரவிக்கப்படவுள்ளனர்
திருமதி சந்திரலீலா தனது 33 வருட கல்விச்சேவையில் இருந்த ஓய்வுபெற்றுச்செல்கின்றார்.இவர்தனது முதல் நியமனத்தை அனுராதபுரம் வெலிகொல்லாவ முஸ்லீம் வித்தியாலயத்தில் பெற்று மிகவும் சிக்கலான காலத்தில் நான்கு வருடம் பணியாற்றினார் பின்னர் கோப்பாய் ஆசிரிய பயிற்கலாசாலையில் பயிற்சிபெற்ற இவர், முதூர் புனித அந்தோனியார் மகாவித்தியாலயத்தில் 9வருடங்கள் சேவையாற்றினார். பின்னர் முதார் அந்நகார் மகளீர் வித்தியாலயத்தில் இரண்டரை வருடங்கள் பணியாற்றிய இவர் திருகோணமலை அல்மின்காஜ் வித்தியாலயத்தில் ஒருவருடமும், திருகோணமலை வாணி வித்தியாலயத்தில் 8 வருடங்களும் பணியாற்றி இறுதியாக கப்பல்துறை சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆறரை வருடங்கள் பணியாற்றி 33 வருடங்களின்பின்னர் காலமிருந்தும் ஒய்வுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் இவரது சிறந்தவேவையைபாராட்டி பாடசாலை நிருவாகம் கௌரவிப்பு நிகழ்வை சனிக்கிழமை நடாத்துகின்றது. இவர் மூதூர் பிரதேசத்தில்பணியாற்றிய காலத்தில் மிக நெருக்கடியான காலகட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்காக ; பல சமூகசேவைகளையும் முன்னின்று செய்தவராவார்மூதூர் இந்து மகளிர் அமைப்பை ஏற்படுத்தி அதன்தலைவியாக செயற்பட்டார்.அக்காலத்தில்
மூதூர் அன்னைசாரதா மகளிர் இல்லத்தை திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர்பேரவையுடன் இணைந்து தோற்றுவிப்பதில் முக்கிய தூண்டுகோலக இருந்த இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இவ்வில்லத்தை 10 ஆண்டுகள் நிருவாகச்செயலாளராக இருந்து பராமரித்து வந்தார்.
இக்காலத்தில் மூதூர் ஸ்ரீ சித்திவிநாயகர் அறநெறிப்பாடசாலையை தோற்றுவித்து தேசியமட்டத்தில் மாணவர்கள் திறமைகாட்டவும் வழிசமைத்தார்.

டீநசநiஉh அவை யுnhäபெநn