மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டாக்காலிகளை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை. மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்

க. விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் நெடுஞ்சாலை வீதிகளிலும்,பிரதான வீதிகளிலும் அநாதரவாக நடமாடும் கட்டாக்காலி மாடுகளையும்,ஏனைய விலங்குகளையும் முறையாக கட்டி தங்களின் வீடுகளில் பாதுகாப்பாக வைத்திருக்ககூடிய நடவடிக்கைகளை அதன் உரிமையாளர்கள் ஏற்படுத்த வேண்டும்.அவ்வாறு வைத்திருக்க முடியாமால் நெடுஞ்சாலை வீதிகளிலும்,பிரதான வீதிகளிலும் அநாதவராக நடமாடும் கட்டாக்காலி மாடுகளையும்,ஏனைய விலங்குகளையும் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகம்,உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள்,செயலாளர்கள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு -கல்முனை, மட்டக்களப்பு முதல் ஓட்டமாவடி ஊடான வாகரை வரையான நெடுஞ்சாலை வீதிகளிலும்,மாவட்டத்தில் உள்ள ஏனைய பிரதான வீதிகளிலும் அநாதவராக நடுமாடும் கட்டாக்காலி மாடுகளையும்,ஏனைய விலங்குகளினாலும் நாளாந்தம் விபத்துக்கள் ஏற்பட்டு பலர் காயமடைந்தும்,மரணித்த சம்பங்களும் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்விடயமாக மாவட்டத்தில் நாளாந்தம் இடம்பெறுவதை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு திங்கட்கிழமை(30.7.2018)மாலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு   எடுத்துக்கூறிய போதே இவ்வாறு கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை தான் துரிதமாக மேற்கொள்ளுவதாக தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்:-கட்டாக்காலி மாடுகளும்,ஏனைய விலங்குகளும் நெடுஞ்சாலை, பிரதான வீதிகளிலும் அநாதரவாக நடமாடுகின்றது.இதனை இதன் உரிமையாளர்கள் முறையாக தங்களின் எல்லைகளுக்குள் கட்டி பராமரித்துக் கொள்ளுங்கள்.அவ்வாறு கட்டி பராமரித்துக் கொள்ளாதவர்களின் கட்டாக்காலி மாடுகளையும்,விலங்குகளையும் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகம்,உள்ளுராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள்,செயலாளர்கள் துரிதமாக மேற்கொள்ளுவதற்குரிய நடவடிக்கையை தாம் உடனடியாக மேற்கொள்ளுவதாக தெரிவித்தார்.

நாளாந்தம் நெடுஞ்சாலை, பிரதான வீதிகளில் கட்டாக்காலிகளினால் விபத்துக்கள் ஏற்படுகின்றது.இதனால் மரணித்த,காயப்பட்ட சம்பங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படுவதனால் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அதிகரிக்கப்படுகின்றது.இதனை கட்டாக்காலிகள் வைத்திருப்போர் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

சில உள்ளுராட்சி மன்றங்களின் எல்லைப்பகுதிகளில் கட்டாக்காலிகளை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை ஒலிபெருக்கி மூலம் ஆறுமாதத்திற்கு முன்பு அறிவித்திருந்தும் அப்பிரதேச உள்ளுராட்சி மன்ற தவிசாளர்,செயலாளர், மக்கள் பிரதிநிதிகள் இதுவரையும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் அவரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.குறித்த பிரதேசசபை தவிசாளர் கட்டாக்காலிகளை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைக்கு பொலிசாரின் உதவியை நாடியபோதும் பொலிசாரின் உதவி கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார். இவ்விடயமாகவும் மாவட்ட அரசாங்க அதிபரிடமும் முறையிடப்பட்டது.இவ்விடயமாக மேலதிகமான நடவடிக்கையை தாம் மேற்கொள்ளுவதாக தெரிவித்தார்.