திருமலையில் கலாபூசணம் வெற்றிவேலுக்கு பாராட்டு

திருகோணமலை மாவட்டத்தில் அண்மையில் சைவப்புலவர் பரீட்சைக்குதோற்றி சித்திபெற்ற கலாபூசணம் கணவதிப்பிள்ளை வெற்றிவேல் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அவர் கல்வி கற்று, கற்பித்த சம்பூர் மகாவித்தியாலயத்தில் இன்று காலை 9.00மணியளவில் இடம்பெற்றன. இந்நிகழ்வில் சிரேஸ்ர ஊடகவியலாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளுருமான பொ.சற்சிவானந்தம், ஸ்ரீமுருகன் வித்தியாலய அதிபர் ம.சச்சிதானந்தம், கலாபூசணம்.அ.குகராஜா, உள்ளிட்டோர் வாழ்த்துரைகளை வழங்கினர், ஸ்ரீசம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலய பிரதம குரு ஆசியுரைகளை வழங்கிவைத்தார்.

சம்பூர் தமிழ் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாமன்றத்தின் தலைவர்வைத்தியகலாநிதி அ.ஸதீஸ்குமார் தலமையுரையாற்றுவதனையும் கொட்டியாபுரப்பற்று இந்து சமய அபிவிருத்தி ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் கலாபூசணம் அ.குகராஜா வாழத்துரைவழங்குவதனையும் மன்றத்தினாரால் சைவப்புலவருக்கும் அவரது துணைவியாருக்கும் மலர்மாலை மற்றும் பொன்னாடை போர்த்துகௌரவித்தத பின்னர் வாழத்துப்பா வழங்குவதனையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காண்க