வெருகல் பிரதேச செயலாளராக குணநாதன்


பொன் ஆனந்தம்

திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளராக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரிவில் பணியாற்றிய குமாரசுவாமி குணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார.; இவர்தனது கடமைகளை இன்று காலை வெருகல் பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இங்கு பிரதேச செயலாளராக இருந்த மா.தயாபரன் மட்டக்களப்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு குணநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்

குணநாதன் கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர், மற்றும் சமூகசேவைகள்  திணைக்களப்பணிப்பாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரை இன்று வெருகல் பிரதேசத்தில் பொதுமக்கள் வரவேற்றனர்.முதலில் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர்சுவாமி ஆலயத்திற்குச்சென்று வழிபட்ட பின்னர் தனது கடமைகளை அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.