மட்டக்களப்பு கல்விவலயம் முதலிடம்

(க. விஜயரெத்தினம்)
கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் குழு விளையாட்டுக்களில் மட்டக்களப்பு கல்வி வலயம் முதலிடம் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் தெரிவித்தார். கடந்த 5.5.2018 திகதி முதல் 8.7.2018 வரையும் நடைபெற்ற கிழக்கு மாகாண விளையாட்டு போட்டியில் பல்வேறு வயதுப்பிரிவினருக்கிடையே நாடாத்தப்பட்ட 13 குழுவிளையாட்டுக்களில் 233 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு கல்வி வலயம் முதலாமிடத்தையும்,96 புள்ளிகளைப் பெற்று திருகோணமலை கல்வி வலயம் இரண்டாம் இடத்தையும்,73 புள்ளிகளைப்பெற்று மட்டக்களப்பு மத்திய கல்விவலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

கிழக்கு மாகாண விளையாட்டுப்போட்டியின் குழுவிளையாட்டுக்கள் திருகோணமலை, கந்தளாய்,பட்டிருப்பு, கல்முனை வலயங்களில் நடைபெற்றது.இதற்கான விருதுகள் கடந்த 21.7.2018 திகதி கந்தளாய் லீலாரத்தின விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று இறுதிநாள் நிகழ்வில் வழங்கப்பட்டது.