சமுகசேவையை எந்நேரமும் செய்வதற்கு தயாராக இருக்கவேண்டும்

மாணவராகிய நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இலக்கினை வைத்து அந்த இலக்கினை நோக்கியதாகவே உங்களுடைய பயணம் அமையவேண்டும். இதுவே காலத்தின் தேவையாகவுள்ளது என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் மட்டக்களப்பு மாட்ட இணைப்பாளர் க.கோபிநாத் அவர்கள் தெரிவித்தார்.

பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய அதிபர் க.கமலநாதன் அவர்களின் அழைப்பின்பேரில் பாடசாலை குறைகளை கேட்டறியும் முகமாக வருகைதந்த இவர் மணவரிடத்தில் கருத்துத்தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்

இலங்கையைப் பொறுத்தளவில் தற்போது அரச தொழிலுக்கான கல்வித்தரம் என்பது உயர்ந்து கொண்டு செல்கின்றது. தற்போது கபொ.த.சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடையாமல் எந்தவிதமான சாதாரண தொழில்களையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால் மாணவர்கள் கல்வியில் ஊக்கம் செலுத்தி குறித்த பரீட்சையில் சித்தியடைவேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. சித்தியடைந்தால் மாத்திரமே ஒரு சாதாரண அரசதொழிலை நீங்கள் பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவர்களாக காணப்படுவீர்கள்.

அதுமாத்திரமின்றி இலங்கையைப் பொறுத்தளவில் நீங்கள் மூன்று மொழிகளில் தேர்ச்சியடைய வேண்டும். அவ்வாறு தேர்ச்சியடைந்தால் மாத்திரமே எதிர்காலத்தில் உயர்தொழில்களை நீங்கள் பெற்றுக் கொள்வதற்கும், அத்தொழிலை செவ்வனே தங்குதடையின்றி திருப்தியாக செய்வதற்கும் இலகுவாக இருக்கும் எனவே மாணவர்களாகிய நீங்கள் தற்போது இருந்தே ஒவ்வொருவரும் இலக்கினை வைத்து செயற்பட வேண்டும்.

நன்றாக விளையாடுகங்கள் ஆனால் அனைத்தையும் விளையாட்டாக எடுத்துவிடவேண்டாம்; மாணவப்பருவத்தில் உங்களுக்கிடைக்கின்ற அனைத்து சந்தர்ப்பங்களையும் நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இப்பாடசாலைக்கு வகுப்பறைப்பற்றாக்குறையாக இருப்பதாக அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கான வேண்டுகோள் கடிதத்தினை பெற்று அமைச்சிடம் ஒப்படைத்து அதனைப்பெற்றுத்தருவதற்குரிய நடவடிக்கைகளை நான் முன்னெடுப்பேன். சமூகசேவை என்பது எந்தேரமும் செய்தற்கு தயாராக இருக்கவேண்டும் அப்போதுதான் முழுமையான சேவையை முன்னெடுக்கலாம் என அவர் இதன்போது தெரிவித்தார்….