ஆற்று மணல் அகழ்வதை நிறுத்துமாறு கோரி விவசாயிகள் ஆர்பாட்டத்தில்

மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பாலாமடு வடக்கு விவசாயக் கண்டப் பகுதியில்  பகுதியில் ஆற்று மணல் அகழ்வதை நிறுத்துமாறு கோரி விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலாமடு விவசாயக் கண்ட விவசாயிகளின் ஏற்பாட்டில்  செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அப்பிரதேத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

விவசாயச் செய்கையைப் பாதுகாப்பதற்காக காட்டு விலங்குகளுக்காக போடப்பட்ட பாதுகாப்பு வேலிகளை நாசம் செய்வதால் காட்டு யானைகள் வயல்களை துவம்வம் செய்கின்றன.

விவசாயிகளின் அனுமதியின்றி ஆற்றில் மணல் ஏற்றி வயல்கள் வழியாக கொண்டு செல்வதால் எமது வேளாண்மைச் செய்கை பாதிக்கப்படுகிறது.

முந்தன்குமாரவெளி என்னுமிடத்தில் மணல் அகழ்வதற்கான அனுமதியைப் பெற்று பாலாமடு பகுதியில் இரவு பகலாக மணல் அகழப்படுகிறது.

ஆகழ்படும் மணலை வயலுக்குள் குவித்து வைத்துள்ளார்கள் இதனை பொலிஸாருக்கு அறிவித்த போதிலும் அவர்கள் மணல் அகழ்பவர்களுக்குச் சார்பாகவே நடந்துகொள்கின்றனர்.

உழவு இயந்திரங்களை ஆற்றுக்கள் இறக்கி மணல் ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலம் அந்த தடையை மீறி மணல் ஏற்றுகிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்த பிரதேசத்தில் மணல் அகழ்படுவதால் ஆற்றில் அகலம் அதிகரித்து பல ஏக்கர் வயற் காணிகளை இழந்துள்ளோம் எனவே இந்த பிரதேசத்தில் மணல் அகழ்வதை முற்றாக தடை செய்ய வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.