மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டு விழா

ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டு விழா நேற்று மட்டக்களப்பு கல்லடி கல்வி அபிவிருத்தி சபை மண்டபத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் கோட்ட கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரன் வெளியீட்டுரையாற்றினார். முதல் பிரதியினை மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சபை ஸ்தாபக தலைவர் தேவசிங்கம் அவர்கள் பெற்றுக்கொண்டார். விமர்சன உரைகளை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற ஓய்வுநிலை கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராசா, ஊடக ஆய்வாளரும், ரூபவாஹினி தமிழ் பிரிவு சிரேஷ்ட தயாரிப்பாளருமான எஸ்.மோசஸ் ஆகியோர் நிகழ்த்தினர்.

புpரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த.ஜெயசிங்கம், சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கி.துரைராசசிங்கம் ஆகியோரும் உரையாற்றினர். மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் அவர்களும் கலந்து கொண்டார்.