பணிப்பாளர் இன்றி இயங்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு  பொருத்தமான நிரந்தரமான பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்ட அரசியல்வாதிகளிடம் சுகாதார மேம்பாட்டுக்கான நலன்விரும்பிகள் கோரிக்கை விடுக்கின்றனர்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த இப்றாலெப்பை  ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் அதற்கு பதிலாக நிரந்தரமாக பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதில் தற்போது தாமதமும், இழுபறி நிலையும் காணப்பட்டு வருகினறமையைக் கருத்திற்கொண்டே இக்கோரிக்கையினை இவர்கள் முன்வைத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்திலே இலட்சக்கணக்கான மக்களை மையப்பபடுத்தியதாக அமைக்கப்பட்டுள்ள ஒரேயொரு போதனா வைத்தியசாலையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை காணப்படுகின்றது. எனவே கிழக்கு மாகாண மக்களின் சுகாதார தேவையினை நிறைவேற்றவேண்டிய பொறுப்புவாய்ந்த வைத்தியசாலை இவ்வைத்தியசாலை காணப்படுகின்றது. இவ்வாறான வைத்தியசாலை அண்மைக்காலமாக சற்றுத்தளர்வான நிலையில் காணப்பட்டமையை சில சம்பவங்கள் ஊடாக அறியக்கூடியதாகவுள்ளது.
தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களுக்கு மிகவும் அற்பணிப்போடு சேவையாற்றி வருகின்ற குறித்த பணிப்பாளர் பதவிக்கு பொருத்தமாக மூன்று வைத்தியர்கள் காணப்படுகின்றனர். அந்த வகையில் வழைச்சேனை வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் மதன், கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் முரளீஸ்வரன், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் சுகுணன் அகியோர் இவ் வைத்தியசாலைக்கு பணிப்பாளராக வரக்கூடிய தகுதியை பெற்றவர்களாக காணப்படுகின்றனர்.
இது இவ்வாறிருக்க குறித்த வைத்தியசாலைக்கு மக்களின் நலனைக் கருத்திற் கொள்ளாது  சொந்த நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றக்கூடிய பணிப்பாளரை நியமிப்பதற்காக ஒரு குழு முனைந்து கொண்டு இருப்பதாக நாங்கள் அறிகின்றோம். அவற்றினை கருத்தில் கொள்ளாது சம்மந்தப்பட்டவர்கள் மக்களுக்கு சேவைறாற்ற கூடிய ஒரு பணிப்பாளரை நியமிப்பதற்குரிய நடவடிக்கைகளை  முன்னெடுக்குமாறு இத்தால் கேட்டுக்கொள்கின்றோம்……
.