பல்வேறு பொறுப்புக்களுடன் ஏச்சுவாங்கி நாட்டை அபிவிருத்தி செய்வோம் .மட்டக்களப்பில் பிரதமர்.

(க. விஜயரெத்தினம்)
நாட்டின்மீது நம்பிக்கை,விசுவாசம் வைத்துதான் நாட்டை நல்லநிலைக்கு கொண்டு செல்லவுள்ளோம்.நாட்டின் பொறுப்புக்களை உணர்ந்து முன்னைய ஆட்சியாளர்களினால் வாங்கிய பணத்தையும்,அதற்குரிய வட்டிப்பணத்தையும் கொடுத்தான் இளைஞர்களின் எதிர்காலத்தை நல்லநிலைக்கு நல்லாட்சி அரசாங்கம் கொண்டு செல்லும்.தற்போது நல்லாட்சி அரசாங்கம் ஏச்சு வாங்கிக் கொண்டுதான் நாட்டை அபிவிருத்தி செய்கின்றது.கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா வியாபாரத்துறைக்கு தடையாக இருக்கின்ற போக்குவரத்துப் பிரச்சனையை சீர் செய்வதன் மூலம் வாழ்வாதரப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரலாம்.குறிப்பாக பாதை புனரமைப்பு,நீர்ப்பாசன வேலைத்திட்டங்கள்,சிறிய குளங்களை கட்டுவது,இளைஞர்சேவைகள் வேலைத்திட்டங்கள்,கிராமிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நாட்டை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என பிரதமந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இரண்டு கோடியே 70 இலட்சம் ரூபா நிதியில் ஆரையம்பதியில் கட்டி முடிக்கப்பட்ட பிரதேச செயலகத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்து உரையாற்றுகையிலே இதனை குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து மேலும் குறிப்பிடுகையில்:- இந்த நாட்டிலே எனக்காக வேலை செய்வதற்கு போதியளவு வசதிவாய்ப்புக்கள் தற்போது அழகாக இருக்கின்றது.அன்று அரச உத்தியோகஸ்தர்களுக்கு வேலை செய்வதற்கு வசதியில்லாமல் இருந்தது.உத்தியோகஸ்தர்கள் இருந்தாலும் அந்தநேரத்தில் வசதிவாய்ப்புக்களோ,கட்டிட வசதிகளோ போதியளவு இருந்திருக்கவில்லை.முதலிலே சிறப்பான வசதிகளை மேற்கொள்வதற்கு அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு வசதிவாய்ப்புக்களை வழங்கவேண்டும்.அதற்கு பிறகு வேலை செய்யவேண்டும்.அதேபோன்றுதான் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை அமைத்து தருகின்றோம்.

சிலபேர் சொல்லுங்கின்றார்கள் வஜிர அபேவர்த்தன எல்லாவற்றிலும் கையடித்துக்கொண்டு செயற்படுகின்றார் என்று கூறுகின்றார்கள்.அதுதான் உள்ளுராட்சி அமைச்சின் வேலைத்திட்டமாகும்.வீடுகளிலும் அவ்வாறுதான் வேலைகள் இடம்பெறுகின்றது.இதற்கு முதல் 2015 ஆம் ஆண்டளவில் 15000 ரூபா முதல் எல்லா கிராமசேவையாளர் பிரிவுகளிலும் பணம் கொடுத்தோம்.இதனை இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக செய்து வருகின்றோம்.இதனால்தான் பிரச்சனைகள் இருந்தது.பிரதேச செயலங்களில் கட்டிடங்களும்,வசதிகளும் இருக்கவில்லை.அதற்காகத்தான் நல்லாட்சி அரசாங்கம் வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.அதேபோன்றுதான் கிராமிய மட்டத்திலே பாரியதொரு விசித்திரமான அபிவிருத்தியையும்,புரட்சியையும் ஏற்படுத்தியுள்ளோம்.இதனை 2019,2020 ஆம் ஆண்டுவரையும் நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தவுள்ளது.இதனை தொடர்ச்சியாக செயற்படுத்த இருக்கின்றோம்.இதனை கிராமத்திற்கே முன்னெடுத்து செல்வோம்.அங்கு எல்லோரும் பங்குகொண்டு செய்யவுள்ளோம்.இந்த அடிப்படையிலே ஜனாதிபதியின் ஊடாக அவரையும் இணைத்துக்கொண்டு நாட்டுமக்களுக்கு நல்லதை செய்யவுள்ளோம்.கிராமத்தில் புரட்சியை செய்து கிராமமக்களின் பொருளாதார,அபிவிருத்தி சம்பந்தமாக பிரச்சனைக்கு தீர்வுகாணவுள்ளோம்.

இதைத்தவிர வெவ்வேறான வேலைத்திட்டங்களை கொண்டு செல்லவுள்ளோம்.அதேபோன்றுதான் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற வீதி அபிவிருத்தி,நீர்ப்பாசன வேலைத்திட்டங்களை கிராமப்புரச்சிக்கு மேலதிகமாக செய்யும் வேலைத்திட்டமாகும்.கிராமிய வேலைத்திட்டம் எனும் வேலைத்திட்டத்தை பாரியதொரு வேலைத்திட்டமாக கொண்டு செல்லவுள்ளோம்.

கிராமத்திலிருந்து குறுகியகாலத்திற்குள் கூடியவேலைத்திட்டங்களை செய்யவுள்ளோம்.கூடிய வேலைத்திட்டங்களை செய்வதற்கே நாங்கள் நிதி ஒதுக்கியுள்ளோம்.பாதைபுனரமைப்பு,நீர்ப்பாசன வேலைத்திட்டம், சிறிய குளத்தை புனரமைப்பு,பிரதேச செயலாளர் காரியாலயங்களை கட்டுவது போன்ற திட்டமிடல்களை செய்துவருகின்றோம்.நிதி ஒதுக்கீடுகளை செய்து ஒப்பந்தக்காரர்களை தேடவேண்டும்.குறுகிய காலத்திற்குள் திட்டமிடல்களை அமுல்படுத்தி செய்யவேண்டும்.கிராமிய வேலைத்திட்டம் என்பது 15000 ரூபா பணத்தைக்கொண்டு குறுகியவேலைகளை செய்து முடிக்கவேண்டும்.கிராமிய வேலைத்திட்டங்களை நிதி அமைச்சின் செயலாளரை மையப்படுத்தி ஒரு குழுக்கள் ஊடாக செயற்படுத்தி தேசிய கொள்கை பொருளாதார அமைச்சின் மாவட்ட செயலாளரின்மூலம் செய்யப்படும் வேலைத்திட்டமாகும்.அனைத்து திட்டமிடல்களையும் திட்டமுகாமைத்துவ அமைச்சின் ஊடாக செய்யவேண்டும்.இது 18மாதங்களுக்குள் செய்து முடிக்கப்படவேண்டும்.ஒரு சதத்தையும் திறைசேரிக்கு மீண்டும் அனுப்பாமல் செலவு செய்யுங்கள்.அதை பொதுமக்கள்தான் செய்யவேண்டும்.அதற்காகத்தான் கிராமத்திற்கு நாங்கள் நிதியை கொடுத்துள்ளோம்.எல்லாத்திட்டங்களும் கிராமங்களிலிருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும்.அப்போதுதான் கிராமத்தில் கூடுதலான நிதிப்புழக்கம் இருக்கும்.இவ்வாறுதான் வேலை செய்து கொண்டு போகின்றோம்.

இதற்கு மேலதிகமாக யுத்தத்தினால் அழிவடைந்த கிழக்குமாகாணத்தை உள்வாங்கி பாரியதொரு வேலைத்திட்டத்தை செய்யவுள்ளோம்.மாகாணத்திலே இரண்டு நாட்கள் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு அபிவிருத்தி திட்டமிட்டுள்ளோம்.கிழக்கை அபிவிருத்தி செய்ய போக்குவரத்துப் பிரச்சனையுள்ளது.கிழக்குக்கான வானவூர்தி போக்குவரத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.இதன்மூலம் சுற்றுலாவியாபாரத்தை ஆரம்பித்தால் கிழக்கில் வாழ்வாதாரமிழந்தவர்களுக்கு வசதிகள்,வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும்.வருடம் முழுவதும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அடையும்.

  1. நாட்டை நாங்கள் பாரமெடுத்தபோது பாரியநிதி தேவையாகவுள்ளது.அப்போது நாட்டை மீட்டெடுத்தபோது பாரிய நிதித்தேவை காணப்பட்டது.வட்டியைக்கட்டி கடனை மீளச்செலுத்தினோம்.இன்னும் கொஞ்சம் நாட்கள் கடந்தால் கிறீஸ்நாடு போன்று வங்குரோத்து நிலைக்கு போயிருக்கும்.நாட்டை நம்பிக்கை, விசுவாசத்துடன் நேசித்து கடனை கொடுத்து,வட்டியையும் செலுத்தி வருகின்றோம்.வருமானம் போதாது.அதற்காக வற்வரியை கூட்டி நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புகின்றோம்.இதற்காகத்தான் அரசாங்கத்துக்கு நாட்டுமக்கள் ஏசுகின்றார்கள்.அரசாங்கம் என்ன செய்வதுதான்.இளைஞர்களின் எதிர்காலத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசெல்வோம்.பல்வேறு பொறுப்புக்களுடன் ஏச்சுவாங்கி நாட்டை அபிவிருத்தி செய்வோம் எனத்தெரிவித்தார்.