உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சினால் நூலக ஆளணியிருக்கான பயிற்சிப்பட்டறை

மட்டக்களப்பு மாநகர சபை பகுதியில் மாணவர்கள் மற்றும் பொது மக்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துவதனை நோக்காகக் கொண்டு ஊளுராட்சி மாகாண சபைகள் அமைச்சினால் நூலக ஆளணி யிருக்கான பயிற்சிப்பட்டறை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நூலக மக்கள் மேன்பாடு நிலையிற்குழுக்களின் தலைவர் வே.தவராஜா தலைமையில் இடம் பெற்றது.

இவ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் கலந்து கொண்டார்.

இங்கு நூலக ஆளணியிருக்கான பயிற்சிப் பட்டறை வளவளர்களாக கிழக்கு பல்கலைகழக பதில்நூலகர் ஜெ.ஜெயராஜ் மற்றும் எம்.ஜெயகாந்தன் (நூலக முறை மையியல் ஆய்வாளர் மற்றும் ஊவ வெல்லஸ பல்கலைகழக சிரேஸ்ட உதவி நூலகர் ரி.பிரதீபன் கலந்து கொண்டனர்.

இங்கு நூலகங்களின் பணியாற்றுவர்களுக்கு மக்களிடம் மீள் உருவாக்கதிற்குள்ளாகும் பொது நூலகத் தோற்றப்பாடு எனும் தலைப்பிலும் பொது நூலகம் சமுகத்திற்குள் ஊடுருவும் நவினதிட்டங்கள் மற்றும் தற்போதைய தகவல் பரிமாற்றத்தில் எதிர்நோக்கும் சாவல்கள் எனும் தலைப்புகளிலும் இங்கு விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

இதன் போது மட்டக்களப்பு மாநகர சபைகுட்பட்ட நூலகங்களின் பணியாற்றுவர்களிடம் அவர்கள் எதிர்நோக்கும் சாவல்கள் மற்றும் முக்கிய தேவைகள் பற்றியும் இங்கு மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது