புதிய கொடித்தம்பத்தில் ஆடிஅமாவாசை மஹோற்சவத்திற்கான கொடியேற்றத்திருவிழா!

 
2000ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுப்பிரசித்திபெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை மஹோற்சவத்திற்கான கொடியேற்றம் நேற்று(25) புதனன்று  ஆலயத்தலைவர் சு.சுரேஸ் முன்னிலையில் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ.சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையிலான 12குருக்கள் சகிதம்  புதியகொடித்தம்பத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 18நாட்கள் திருவிழாக்கள் நடைபெற்று ஆக.11ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் இம்மஹோற்சவம் நிறைவடையும். நேற்று நடைபெற்ற கொடியேற்றத்திருவிழாவைக்காணலாம்.
 
படங்கள் :  சகா