படுவான்கரையில் பிறப்பு வீதத்தை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு குவியும் பாராட்டுக்கள்.

புலம்பெயர் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் ஆதவில் கிராம அபிவிருத்தி என்ற தலைப்பில் மண்முனை மேற்கு பிதேச செயலகப் பிரிவில் தமிழ் மக்களின் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இத்திட்டத்தின்கீழ்நரிப்புல்லுத்தோட்டம், மகிழவட்டவான் நெல்லூர். விழாவட்டவான் மற்றும் மணிபுரம் ஆகிய கிராம அபிவிருத்திச் சங்கங்கங்களினூடாக, மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் மூடப்படும் நிலையில் உள்ள பாடசாலையின் நிலைமை கருதி பிரதேச தமிழ் மக்களின் பிறப்பு வீதத்தை அதிகரிக்கும் நோக்கில்  2016ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறுவர் தினத்தை முன்னிட்டு 2வது குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு தலா ரூபா 10,000.00 வும் பிள்ளை பராமரிப்பிற்காக 18 வயது வரை மாதம் தோறும் தலா ரூபா 1,000.00 வும் வழங்கி வைக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டமானது இரண்டு வருடங்களைக் கடந்த நிலையில் பல பாராட்டுதல்களையும், அதிகப்படியான ஆதரவையும் பெற்றுவந்துள்ளமையால் இன்னும் வலுவூட்டப்பட்ட நிலைமையில் 25.07.2018 (புதன் கிழமை) பங்குடாவெளி கிராமங்களில் மேலும் 2வது குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுத்த தாய்மார்களுக்கு தலா ரூபா 10,000.00 ஐந்து குடுப்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தில் 56 குடும்பங்கள் உள்வாங்கப்பட்டதையும் நரிப்புல்லுத்தோட்டம், மகிழவட்டவான், விழாவட்டவான், மணிபுரம், நெல்லூர், தளவாய், புலயவெளி, பங்குடாவெளி ஆகிய கிராமங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டு இத்திட்டம் வெற்றியளித்து வருவதையும் பங்கேற்கின்ற புலம்பெயர்வாழ் தமிழ் சமூகத்திற்கு தாபகர் சுவீஸ் வாழ் திரு.செ.அமிர்தலிங்கம் நன்றிச் செய்தியையும் புதிதாக இணைந்துகொள்பவர்களை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் விசேடமாக பங்குடாவெளியைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் வாழ் திரு.மு.இரத்தினகுமார் கடந்த வருடம் இதுபோன்ற நிகழ்வில் கூறியதற்கு அமைய 2017 க.பொ.த.சா.தரத்தில் தோற்றி சித்தியெய்திய 10 மாணவர்களுக்கு ரூபா:18,000 பெறுமதியான துவிச்சக்கரவண்டிகளையும் பரிசில்களையும் பங்குடாவெளியைச் சேர்ந்த தமது தந்தையாரான கிராம சேவையாளராக கடமையாற்றி அமரத்துவமடைந்த அமரர் முத்துலிங்கம் அவர்களின் ஞாபகாத்தமாக வழங்கி வைத்தார் . இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் மட்டக்களப்பு மேற்கு செல்வி அகிலா கனகசூரியம் கலந்துகொண்டு கூறுகையில் இவ்வாறான உதவிகளாலும் ஆசிரியர்களது அற்பணிப்பாலும் இறுதி வருடத்தில் க.பொ.த.சாதாரணதரத்தில் கடந்த வருடங்களை விட சித்தி வீதம் மேலும் 19வீதததால் உயர்வடைந்துள்ளது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்தார்.

விசேட அதிதியாக திரு.க.ஹரிகரராஜ் (DDE)வலயக் கல்விப் பணிமனை மட்டக்களப்பு மேற்கு வலயம் ஆகியோர் தங்கள் வலய கல்வி அபிவிருத்திக்கு இத்திட்டம் மேலும் வலுவூட்டுவதாகவும் மேலும் பல கிராமங்களை இத்திட்டத்தினுள் இணைத்துக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்தனர் மேலும் பாடசாலை அதிபர், சமூக ஆர்வலர்கள் கிராம அபிவித்திச் சங்கத் தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர்