40வருடங்கள் காத்திரமான கல்விப்பணி அதிபர் திருமதி.திலகவதி ஓய்வுபெற்றார்

(க.விஜயரெத்தினம்)
கண்ணீர் சிந்தி,எல்லோரும் மனங்களையும் நெகிழவைத்து,கட்டியணைத்து ஆரத்தழுவி அதிபர் திருமதி.திலகவதி ஓய்வுபெற்றார்.

40வருடங்கள் காத்திரமான கல்விப்பணி ஆற்றிவிட்ட அதிபர் திலகம் திருமதி.திலகவதி அவர்கள் 24.7.2018 தனது கல்விப்பணியிலிருந்து பிரதி அதிபர்கள்,ஊடகவியலாளர், ஆசிரியர்கள்,மாணவர்கள் மத்தியில் ஓய்வு பெற்றுள்ளார்.

அதிபர் திலகம் திலவதிக்கான பிரியாவிடை செலுத்தும் நிகழ்வும்,அறுபதாபது(60) பிறந்ததின நிகழ்வும் கல்லூரியின் நலன்புரிச்சங்கத் தலைவரும்,ஆசிரியையுமான திருமதி. வசந்தா குமாரசாமி தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நண்பகல் 12.30 மணியளவில் நடைபெற்றது.

முதலில் அதிபர் திலகம் திலகவதி ஹரிதாஸ் அவர்களுக்கு மாலை அணிவித்து அன்னாரின் குடும்பத்தாருடன் வரவேற்றார்கள்.சுடரேற்றப்பட்டு, பிறந்ததின கேக் வெட்டி, கேக் சாப்பிட்டார்கள்.அதிபருக்கு ஆசிரியர்கள் மாலை அணிவித்து,சேவையை பாராட்டி பொன்னாடை போற்றி கௌரவித்தார்கள்.
அதிபரினால் ஆற்றப்பட்ட கல்விப்பணியை நினைவுகூர்ந்து பலரால் பேசப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிமனையின் உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் வீ.லவக்குமார்,பிரதியதிபர்களான வீ.அமிர்தலிங்கம்,திருமதி. பீ.இராஜகோபாலசிங்கம்,திருமதி. பவளசாந்தி பிறேமகுமார்,உதவி அதிபர் திருமதி. சாந்தி சிவலிங்கம்,முன்னாள் பிரதிஅதிபர் எம்.இன்பராசா,ஊடகவியலாளர் க.விஜயரெத்தினம்,  ஆசிரியர்களான நித்தியகலா சிவநாதன்,சுசாந்தினி சிவநாதன்,கே.ரஞ்சித்நிமால்,பீ.மலர்வண்ணன்,திருமதி. சுகந்தி சுதர்சனன்,திருமதி.டிலாணி ராஜ்குமார்,திருமதி.சுகந்தி இதயராசா,திருமதி. தயா யோகராசா,திருமதி.வளர்மதி பிரபாகரன்,திருமதி.காயத்திரி வித்தியாசங்கர்,என்.இதயராசா,திருமதி.ஆர்.சிவபாதம்,ஜீ.ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

இதன்போது வாழ்த்துப்பா,ஞாபகப்பரிசு பாடசாலை நலன்புரிச்சங்காத்தால் வழங்கப்பட்டது.