தமிழ்த்தினப்போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற மகிழூர் த.சுதர்ணியா

இம்முறை நடைபெற்ற தேசிய மட்ட தமிழ்த்தினப்போட்டியில் இலக்கிய விமர்சனப்போட்டியில் பங்குபற்றி முதலாமிடம் பெற்று தக்கப்பதக்கம் பெற்ற மகிழூர் சரஸ்வதி வித்தியாலய மாணவி த.சுதர்ணியாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் ந.புட்பமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன், உதவிக்கல்வி பணிப்பாளர்(தமிழ்) எஸ்.நேசன், கோட்டக்கல்வி பணிப்பாளர், க.அருள்ராசா மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவ சங்கத்தனர் என பலரும்கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவிக்கு பிரதம அதிதியினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பயிற்று வித்த ஆசரியர்  ஆலோசனை வழங்கிய உதவிக்கல்வி பணிப்பாளருக்கும் பாரட்டுக்களை தெரிவித்தார்.
இதன் அவர்போது கருத்து தெரிவிக்கையில்
  இவ்வாறான பாராட்டு விழாக்களே மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் சாதனைபடைப்பதற்கு முன்மாதிரியாகவும் காணப்படுகின்றது. இலங்கையில் காணப்படுகின்ற ஒன்பது மாகாணங்களுடன் ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் போட்டிபோட்டே இந்த மாணவி இந்த சாதனையை நிகழ்தியுள்ளார். இவர்பாராட்ட படவேண்டியவரே அதே போன்று இந்த பாடசாலை தற்போழுது முன்னேற்றத்தை கண்டு வருகின்றது நடந்து முடிந்த மாகாண மட்ட விளையாட்டுப்போட்டியிலும் இ.துஜாயினி எனும் மாணவி சாதனை படைத்துள்ளார். இதுவும் பாராட்டுக்குரியது. எனவே இப்பாடசாலை தொடர்சாதனைகளை எதிர்வரும் காலங்களில் நிலைநாட்ட வேண்டும் என வாழத்துவதாக அவர் இதன் போது தெரிவித்தார்