கிழக்கு மாகாண பட்டிமன்றக்குழுவினரின் சிறப்பு பட்டிமன்றம்

மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் கிழக்குமாகாண பட்டிமன்றக்குழுவினரின் ‘நுண்கடன் சமூகத்திற்கு அவசியமா? அவசியமில்லையா? எனும் சிறப்புபட்டிமன்றம் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(29) பி.ப.3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

மட்டு தமிழ்ச்சங்கத் தலைவர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்விற்கு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராசா சரவணபவன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

பட்டிமன்றத்தலைமை கவிஞர் வேதமூர்த்தி, பேச்சாளர்களாக சௌந்லெனாட் லொறன்ஸோ, நிலாந்தி சசிக்குமார், சதாசிவம் நிலோஜினி, செ.துஜியந்தன், செ.திவாகரன், பா.மிதுர்ஷன், ஆகியோர் கல்ந்து கொள்ளவுள்ளனர்.
(100 பேருக்கு மாத்திரமே அழைப்பு)