மட்டக்களப்பில் மலசலகூடத்தை துப்பரவு செய்த பிரதேசசபை உறுப்பினர்

செங்கலடி பேருந்து தரிப்பு நிலைய மலசல கூடத்தை  ஏறாவூர் பற்று பிரதேசசபை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் நல்லையா சரஸ்வதி சாந்தி துப்பரவு செய்தார்.

பிரதேசசபை ஆரம்பமாகி நான்கு மாதங்கள் கடந்தும் இம் மலசலகூடம் சுத்தம்செய்யப்படவில்லை எனவும் பல தடவை பிரதேசசபைக்கு இது சம்மந்தமாக தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவிலை எனவும் தெரிவித்த அவர் இவ்வாறு தாம் இதை சுத்தம் செய்ததாக தெரிவித்தார்.

குறித்த மலசலகூடத்தினை செங்கலடி பிரதேசத்திற்கு வரும் பல்வேறு பிரதேச மக்களும் பயன்படுத்திவரும் நிலையில் மிகமோசமான நிலையில் குறித்த மலசலகூடம் காணப்பட்டதாகவும் பிரதேசசபை உறுப்பினர் தெரிவித்தார்.

(மட்டுசெய்திகள்)