இலங்கையில் முதல்முறையாக தமிழ் மொழி மூலமான ஊடகப் பட்டப்படிப்பு

ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களுக்கும், ஊடகவியலாளராக வர விரும்புபவர்களுக்கும் தமிழ் மொழி மூலம் பட்டப்படிப்பினை (Degree) பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பொன்று கிடைக்கப்பெற்றுள்ளன.

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டப்படிப்பை Knowledge Box Media Academy நிறுவனம் வழங்குகின்றது.

மூன்று வருட கால பாடத்திட்டத்தை கொண்ட குறித்த பட்டப்படிப்பில் விரிவுரைகள் மற்றும் பரீட்சைகள் தமிழ் மொழி மூலம் நடைபெறவுள்ளன.

க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு குறித்த பாடநெறியை தொடர முடியும் என்பதுடன், உயர்தர பரிட்சையில் சித்தியடையாத சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கும் 6 மாதகால அடிப்படை பயிற்சிநெறியின் பின்னர் பட்டப்படிப்பினை தொடர முடியும்.

அனுபவமுள்ள ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் நடத்தப்படவுள்ள வகுப்புக்கள் வார இறுதி நாட்களில் நடைபெறும்.

பட்டப்படிப்பினை தொடர்வதற்கும், மேலதிக விபரங்களை தெரிந்துகொள்வதற்கும் 0770423555 என்ற இலக்கத்திற்கு அல்லது [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.