நுண்நிதிக் கடனுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்

நுண்நிதிக் கடனுக்கு நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வாழும் பெண்களுக்கு வழங்கப்படும் நுண்நிதிக்கான கடன் நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பெண்களுக்காக வீடு வீடாக சென்று நுண்நிதி வழங்கும் நடைமுறையை கடைபிடிக்கும் நுண்நிதி நிறுவனங்கள் வழங்கும் கடனுக்காக 40 – 220வீதம் வரையில் வருடாந்தம் வட்டி அறவிடப்படுகின்றது.

கூடுதலான அவதானத்தைக் கொண்ட பொருளாதார நடைமுறை மற்றும் பயன்பாட்டுக்கான வழங்கப்படும் இந்த கடன் காரணமாக கிராம மட்டத்தில் கடனை பெற்றோர் பெரும் இன்னலுக்குள் சிக்கியுள்ளனர்.

அவர்கள் தற்பொழுது பாரிய நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ளனர். ஆகக் கூடுதலாக வறட்சியினால் பாதிக்கப்பட்டடுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களே பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை கடன் பெறும் நடைமுறையிலிருந்து மீட்டிடடுப்பதற்காக தொழில்வாண்மை ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைவாக கடன் நிவாரண வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கென நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.