பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 1981ம் ஆண்டு கலைப்பீடத்திற்குத் தெரிவான தமிழ் மொழி மூல மாணவர்களது வருடாந்த ஒன்று கூடல்

JM.Hafeez)
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 1981ம் ஆண்டு கலைப்பீடத்திற்குத் தெரிவான தமிழ் மொழி மூல மாணவர்களது வருடாந்த ஒன்று கூடல் ஒன்று திருகோணமலை, கின்னியாவில் இடம் பெற உள்ளது.
எதிர்வரும் ஜூலை 28ம் திகதி சனிக்கிழமை மாலை மேற்படி ஒன்று கூடல் இடம் பெற உள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.  ‘கின்னியா இன்’ வரவேற்பு மண்டபத்தில் இது இடம் பெற உள்ளது.
1981ம் ஆண்டு மாணவர்கனாகப் பதிவு செய்து 1984ம் ஆண்டு பொதுக்கலைப்பட்த்தையும் 1985ம் ஆண்டு விசேட கலைப்பட்டத்தையும் பெற்ற மாணவர்கள் குழுவே இந்த ஒன்று கூடலை மேற்கொள்கிறது. குறிப்பிட்ட கல்வி ஆண்டில் பழைய மாணவர்களாக இருந்து தற்போது மட்டக்களப்பு மாவட்ட செயலாளராக (அரச அதிபராக) உள்ள மாணிக்கம் உதயகுமார், ஓய்வு பெற்ற கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் கே.மொகமட் தம்பி, கலாநிதி வர்ணகுலசிங்கம், பாராளுமன்ற சிரேஷ்ட உரை பெயர்ப்பாளர் கிருஸ்தோபர் மகேந்திரன் உற்பட பழைய மாணவர்கள் பலர் இதில் பங்குகொள்ள உள்ளனர்.
எனவே மேற்படி கல்வியாண்டு பழைய மாணவர்கள் சகலரும் பின் வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளும்படி ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுள்ளனர். 0767353910 (சைபுல்லா) அல்லது 0776712606 (நிசார்) , 0718487189 (அலி ஜின்னா) என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 36 வருட நண்பர்களின் ஒன்று கூடல் என்பதால் அரிய வாய்ப்பபை தவற விடாது சகலரும் பங்கு கொள்ளும்படி ஏற்பாட்டுக் குழு வேண்டுகின்றது.