கல்லடி விவேகானந்தாவில் “விவேகா” சஞ்சிகை சிறப்பாக வெளியீட்டு வைக்கப்பட்டது

(க.விஜயரெத்தினம்)
கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியினால் கோர்ப்புச் செய்யப்பட்ட “விவேகா” சஞ்சிகை வெளியீட்டு வைக்கும் நிகழ்வு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் “அதிபர் திலகம்” திருமதி திலகவதி  ஹரிதாஸ் தலைமையில் திங்கட்கிழமை(23.7.2018) நண்பகல் 12.30 மணியளவில் நடைபெற்றது.

ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தாஜீ மகராஜ் அவர்களின் ஆசியுரையுடன் நடைபெற்ற நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் அவர்கள் பிரதம அதிதியாகவும்,கௌரவ அதிதிகளாக சட்டத்தரணியும்,ஓய்வுபெற்ற உதவிக்கல்வி பணிப்பாளருமான கே.தியாகராசா,மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளர் ரீ.யுவராஜன்(தமிழ்),தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ஏ.ரவீந்திரன் மற்றும் உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் வீ.லவக்குமார்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் க.அருட்பிரகாசம்,பிரதி அதிபர்களான வீ.அமிர்தலிங்கம்,திருமதி பீ.இராஜகோபாலசிங்கம்,பவளசாந்தி பிறேமகுமார்,உதவி அதிபர் திருமதி. சாந்தி சிவலிங்கம்,ஆசிரியர்களான திருமதி.நித்தியகலா சிவநாதன்,திருமதி.சுகந்தி சுதர்சனன்,திருமதி.சுசாந்தினி சிவநாதன்,திருமதி. தயா யோகராசா,திருமதி. வசந்தா குமாரசாமி,திருமதி. கே.சீ.நிமலன்,திருமதி.சீ.டாணியல் குணநாதன்,திருமதி.ரீ.ஸ்ரீகுன் உட்பட மாணவர்கள்,நலன்விரும்பிகள் கலந்துகொண்டார்கள்.

முதலில் அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்றார்கள்.மங்கள விளக்கேற்றல்,சுவாமியின் ஆசியுரை,அதிபரின் தலைமையுரை என்பன இடம்பெற்று சஞ்சிகை உத்தியோகபூர்வமாக அதிபரினால் வெளியீட்டு வைக்கப்பட்டது.

சஞ்சிகையின் முதற்பிரதிகளை ஓய்வுநிலை கல்வி அதிகாரி சோ.சிவலிங்கம்,திருமதி.மங்களாதேவி தருமலிங்கம்(இலண்டன்),திருமதி. கோசலை மகேந்திரன்(கனடா),திருமதி இராசலெட்சுமி முருகேந்திரன் பெற்றுக்கொண்டார்கள்.

இதன்போது சுவாமி அவர்களின் ஆசியுரை,தக்ஷனாந்தாஜீ மகராஜ் அவர்களின் ஆசியுரை,கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி. ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் அவர்களின் நயவுரை,இதழாசிரியரும்,பிரதியதிபருமான திருமதி.பவளசாந்தி அவர்களின் நன்றியுரையுடன் சஞ்சிகை வெளியீட்டுவிழா தங்குதடையின்றி முடிவுற்றது