சுவிஸில் கோலாகலமாக நடைபெற்ற விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயசப்பறத்திருவிழா!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் சப்பறத் திருவிழா நிகழ்ச்சியில்  தமிழர்கள் பங்கேற்று அம்மனின் அருளை பெற்றனர்.

சூரிஸ் விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் கொடியேற்றும் நிகழ்ச்சி கடந்த 13-ம் திகதி கோலாகலமாக தொடங்கப்பட்டது.

தொடர்ச்சியாக 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் ஒரு பகுதியாக இன்று சப்பறத் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு சுவிஸின் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நாளைய தினம்  தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது.

இன்று மதியம்  சுவிஸ் வாழ்மட்டக்களப்பு மக்களின் பூசைநிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.