வீடு திடீரென தீப்பற்றி எரிவதனை நாங்கள் அவதானித்தோம் உள்ளிருந்த வயோதிபத்தாய் கதறியழும் சத்தமும் கேட்டது .பழுகாமத்தில் நடந்த சம்பவம்.

மட்டக்களப்பு பழுகாமத்தில்  மின்னொழுக்கு காரணமாக வீடொன்று தீப்பிடித்து முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் புதன் கிழமை பிற்பகல் 3 மணியளவிலையே  பழுகாமம் மாவேற்குடா பிரதேசத்தில் ஒரு தாய் இருபிள்ளைகளுடனும் வயோதிபத்தாயுடனும்  வசித்துவந்த வீடே  தீக்கிரையாகி எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதவது
 வீடு திடீரென தீப்பற்றி எரிவதனை நாங்கள் அவதானித்தோம் உள்ளிருந்த வயோதிபத்தாய் கதறியழும் சத்தமும் கேட்டது முதலில் வயோதிபத்தாயை காப்பாற்றினோம் பின்னரே தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தோம் இந் நேரத்தில் விட்டில் இருந்த தாயும் இரு பிள்ளைகளும் வேலைகாரணமாக வெளியில் சென்றிருந்தனர் என அயலவர்கள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் வீட்டு கூரை உட்பட உடுபுடவைகள், வீட்டுத்தளபாடங்கள், சமயல்பாத்திரங்கள் என அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளது.
இரு பிள்ளைகளில் ஒருவர் பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் கல்விகற்றுவருவதுடன் இம்முறை க.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவியாவர். இச் சம்பவத்தில் மாணவியின் அனைத்து பாடசாலை கற்றல் சம்பந்தமான கொப்பிகள்,புத்தகங்கள், சீருடைகள் என்பனவும் எரிந்து நாசமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்திற்கு பொலிசார், பிரதேச சபையினர், பிரதேச செயலக உத்தியோகத்தோர், கிராமசேவை உத்தியோகத்தர் என பலரும் சென்று பார்வையிட்டதுடன் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்….பழுகாமம் நிருபர்