மட்டக்களப்புக்கு 3400 மல­ச­ல­கூ­டங்கள் இந்தியாவின் நிதியுதவி.

இலங்­கைக்கு இந்­திய அர­சாங்­கத்­தினால் தொடர்ந்தும் பல்­வேறு உத­வித்­திட்­டங்கள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.
அதற்­காக இலங்கை அர­சாங்­கமும் நாட்டு மக்­களும் இந்­திய அர­சுக்கும் அந்­நாட்டு மக்­க­ளுக்கும் நன்றி தெரி­விக்க வேண்டும் என்று கடற்­றொழில் நீரியல் வளங்கள் அபி­வி­ருத்தி மற்றும் கிரா­மியப் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரி­வித்தார்.
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்திலுள்ள மக்­களின் சுகா­தார நலனைக் கருத்தில் கொண்டு இந்­திய அர­சாங்­கத்­தால் மூவா­யி­ரத்து நானூறு மல­ச­ல­கூ­டங்கள் அமைப்­ப­தற்­கான ஒப்­பந்தம் நேற்று இந்­திய உயர்ஸ்­தா­னிகர் காரி­யா­ல­யத்தில் கைச்சாத்திடப்பட்டது.அதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்குக் கருத்துத் தெரி­விக்­கும்­போதே பிரதி அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்,
நாட்டில் ஏற்­பட்­டி­ருந்த யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் போன்­ற­வற்­றுக்குப் பின்னர் இந்­திய அர­சாங்கம் பல்­வேறு உத­வித்­திட்­டங்­களை எமது நாட்­டுக்கு வழங்கியிருக்­கின்­றது. எமது நாட்­டுக்கு 50ஆ­­யிரம் வீடு­களை வழங்­கி­யுள்­ளார்கள். பாட­சா­லைகள் அமைத்தல், வைத்­தி­ய­சா­லைகள் அமைத்தல், மழை நீரைத் தேக்கி உற்­பத்­தியை மேம்­ப­டுத்தல் திட்டம் மற்றும் நாட்டில் எல்லா பிர­தே­சங்­க­ளுக்கும் நோயா­ளி­களை எடுத்துச் செல்­கின்ற அம்­பியூலன்ஸ் திட்­டத்­தையும் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளார்கள்.