தங்கத்துரையை நினைவுகூர்ந்த திருமலை மக்கள்.

19997 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் அ.தங்கத்துரையின் 21ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, மூதூர் – கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (15)  காலை நடைபெற்றது.தனது சேவையினால் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த பிரிந்து சென்ற இவரது நினைவு தினம் அவரது சொந்த ஊரான கிளிவெட்டியில் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது இறைவணக்கம், நினைவுரைகள், 21 தீபச்சுடர் ஏந்தல் போன்றன இடம் பெற்றது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ண சிங்கம்,  ,முன்னால் கிழக்கு மாகாண. கல்வி அமைச்சர் சீ.தண்டாயுதபாணி , முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.நாகேஸ்வரன் ,மூதூர் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் க.துரைநாயகம் ,மூதூர் பிரதேச சபை உறுப்பினர் பூ.சிறிதரன், சிரேஷ்ட ஊடகவியலாளர் பொ.சச்சிவானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.